தாலாட்டும் காற்றே வா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Thalattum Katre Vaa Song Lyrics in Tamil


ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…

—BGM—

ஆண் : தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…

ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்…
என் ஜென்மம் வீணென்று போவேனோ…
உன் வண்ண திருமேனி சேராமல்…
என் வயது பாழ் என்று ஆவேனோ…
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்…
என் ஆவி சிறிதாகி போவேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ…

—BGM—

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…

—BGM—

ஆண் : கண்ணுக்குள் கண் வைத்து…
கண் இமையால் கண் தடவி…
சின்னதொரு சிங்காரம்…
செய்யாமல் போவேனோ…

—BGM—

ஆண் : பேச்சிழந்த வேளையிலே…
பெண் அழகு என் மார்பில்…
மூச்சுவிடும் ரசனையை…
முகராமால் போவேனோ…

—BGM—

ஆண் : உன் கட்டு கூந்தல் காட்டில்…
நனையாமல் போவேனோ…
அதில் கள்ள தேனை கொஞ்சம்…
பருகாமல் போவேனோ…

ஆண் : நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை…
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ…
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை…
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ…

ஆண் : நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்…
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ…

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…

—BGM—

ஆண் : ஒரு நாள் ஒரு பொழுது…
உன் மடியில் நான் இருந்து…
திருநாள் காணாமல்…
செத்தொளிந்து போவேனோ…

—BGM—

ஆண் : தலையெல்லாம் பூக்கள் பூத்து…
தள்ளாடும் மரமேறி…
இலையெல்லாம் உன் பேரை…
எழுதாமல் போவேனோ…

—BGM—

ஆண் : உன் பாதம் வாங்கி நெஞ்சில்…
பதியாமல் போவேனோ…
உன் கண்ணீர் எச்சில் ருசியை…
அறியாமல் போவேனோ…

ஆண் : உன் உடலை உயிர்விட்டு போனாலும்…
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ…
உன் உடலை உயிர்விட்டு போனாலும்…
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ…

ஆண் : உன் அங்கம் எங்கெங்கும்…
உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ…

ஆண் : என் உரிமை நீதானோ…
என் உரிமை நீதானோ…

—BGM—

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தலை கோதும் விரலே வா…

ஆண் : தொலை தூர நிலவே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…
தொட வேண்டும் வானே வா…

ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்…
என் ஜென்மம் வீணென்று போவேனோ…
உன் வண்ண திருமேனி சேராமல்…
என் வயது பாழ் என்று ஆவேனோ…
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்…
என் ஆவி சிறிதாகி போவேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ… நீதானோ…


Notes : Thalattum Katre Vaa Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vaasam (2001). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டும் காற்றே வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading