தாலாட்டு நாள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கிருஷ்ணாகோவிந்த் வசந்தாதம்பி

Thalattu Naal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கை பையில் சந்தோசம்…
காத்தோட பூ வீசும்…
வண்ணத்து தாளுக்குள் அன்பாகுறோம்…

ஆண் : பூமிக்கு வேணும்முன்னு…
விண் தாவும் மீன் ஒன்னு…
வந்தாளே இந்நாள கொண்டாடுறோம்…

ஆண் : எந்த சோகங்கள் வந்தாலும்…
நான் உன்னை சுத்தி…
இருப்பேன் தடுப்பேன் நீ பூத்திட…

ஆண் : எந்த சாமிக்கு முன்னாலும்…
நான் கேட்பதெல்லாம்…
சிரிச்சு செழிச்சி நீ வாழ்ந்திட…

ஆண் & குழு (பெண்கள்) : தாலாட்டு நாள் உந்தன்…
தாலாட்டு நாள் இங்கு…
தாலாட்டு நாள் உன்னை…
பாராட்டும் நாள் அந்த…
மேகங்கள் தேன் சொட்ட…
காற்றெல்லாம் கை தட்ட…
பூமிக்கு நீ வந்த…
தாலாட்டு நாள் கூறுவேன்…

—BGM—

ஆண் & குழு (பெண்கள்) : நாம் வாழ்க்கையே மண் சேரவே…
நாம் பெற்ற கடன்தானே…
அதை தீர்க்கவே எல்லோரிடம்…
சிரிப்பூட்டி நகர்ந்தோம்…
வாழ்வில் நீ இன்று காண்பிக்கும் பாசங்கள்…
வேறேல்லாமே வேண்டாத வேஷங்கள்…

ஆண் & குழு (பெண்கள்) : விழாவோ கனாவோ…
விழாத வினாவோ…
உன் கைகள் மேலே நின்று…
தோள் சாய்க்கும் நேசங்கள்…

ஆண் & குழு (பெண்கள்) : தாலாட்டு நாள் உந்தன்…
தாலாட்டு நாள் இங்கு…
தாலாட்டு நாள் உன்னை…
பாராட்டும் நாள் அந்த…
மேகங்கள் தேன் சொட்ட…
காற்றெல்லாம் கை தட்ட…
பூமிக்கு நீ வந்த…
தாலாட்டு நாள் கூறுவேன்…

—BGM—


Notes : Thalattu Naal Song Lyrics in Tamil. This Song from Thambi (2019). Song Lyrics penned by Vivek. தாலாட்டு நாள் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top