தகதக தகதகவென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. பி. சுந்தராம்பாள்குன்னக்குடி வைத்தியநாதன்காரைக்கால் அம்மையார்

Thaka Thaka Thakavena Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி…
இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே…
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி…
இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே…

பெண் : ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா…
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…

பெண் : தகதக தகதகவென ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
தகதக தகதகவென ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே…
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே…
ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே…
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே…

BGM

பெண் : தாள வகைகளோடு மேள துந்துபிகள்…
முழங்கிட ஓர் கணமே…
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்…
ஆடுக மன்னவனே…

பெண் : தாள வகைகளோடு மேள துந்துபிகள்…
முழங்கிட ஓர் கணமே…
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்…
ஆடுக மன்னவனே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முத்துக்கொடி சக்திக் குலமகள்…
வித்துக்கொரு வெள்ளம் துணையென…
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட…
தித்திப்பது இறைவன் செயலென…
பற்றுந்தரும் பரமன் துணையென…
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட…

BGM

பெண் : கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்…
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்…
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட…

பெண் : திக்குப் பல திமிதிமிதிமி என…
தக்கத் துணை தக தக தக தகவென…
தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட…

BGM

பெண் : இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி…
எழிலோடு எமையாளவா…
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே…
இயங்கியே உலகாளவா…

BGM

பெண் : அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே…
அரசனே நடமாடவா…
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென…
அம்மையுடன் நீ ஆடவா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ…
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ…
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ…
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ…

BGM

பெண் : கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ…
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ…
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…

BGM

பெண் : உலகத்து நீதியே சமயத்துப் பொருளே…
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே…
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே…
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே…

BGM

பெண் : ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா…
ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா…

BGM

பெண் : நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு…
நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு…

BGM

பெண் : அடியவர் திருமுடி வணங்கிட…
கொடி உயர்ந்திட படை நடுங்கிட…
அடியவர் திருமுடி வணங்கிட…
கொடி உயர்ந்திட படை நடுங்கிட…

BGM

பெண் : தகதக தகதக என ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
தகதக தகதக என ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
தகதக தகதக என ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…

குழு : ஓம் நம சிவாய…


Notes : Thaka Thaka Thakavena Song Lyrics in Tamil. This Song from Karaikkal Ammaiyar (1973). Song Lyrics penned by Kannadasan. தகதக தகதகவென பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading