தமிழ் ஈழக் காற்றே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்து சத்யப்ரகாஷ்இசைஅரசன்நாட்படு தேறல்

Tamil Eezha Kaatrea Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உயிரைக் கொடுத்த அன்னை…
கயிறாய் கிடப்பாளோ…
எலும்பைக் கொடுத்த தந்தை…
நரம்பாய் கிடப்பாரோ…

ஆண் : நல்லூர் முருகன் கோயில்மணியில்…
நல்ல சேதி வருமோ…
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்…
உயிரும் உடலும் நலமோ…

ஆண் : ஓடிய வீதிகள் சுகமா…
எங்கள் ஒருதலைக் காதலி சுகமா…
பாடிய பள்ளிகள் சுகமா…
உடன் படித்த அணில்கள் சுகமா…

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ…
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—

ஆண் : முல்லைத் தீவின் கதறல்…
மூச்சில் வலிக்கிறதே…
நந்திக் கடலின் ஓலம்…
நரம்பை அறுக்கிறதே…

ஆண் : பிள்ளைக்கறிகள் சமைத்து முடித்த…
தீயும் மிச்சம் உள்ளதோ…
எங்கள் ஊரை எரித்து மீந்த…
சாம்பல் சாட்சி உள்ளதோ…

ஆண் : வன்னிக்காடுகள் சுகமா…
எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா…
காய்ந்த கண்ணீர் சுகமா…
இன்னும் காயாத குருதி சுகமா…

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ…
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—


Notes : Tamil Eezha Kaatrea Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. தமிழ் ஈழக் காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading