நாளை ஒரு பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஉத்தாரா உன்னிகிருஷ்ணன், ஷில்வி ஷரோன் & பத்மஜா ஸ்ரீனிவாசன்ராஜீவ் மேனன்நாட்படு தேறல்

Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil


பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

பெண் : தாவரங்கள் கைதட்டும்…
தாய்ச்செடிக்குக் கொண்டாட்டம்…
வீண்மீன் போன்றதொரு மண்மீன் நானென்று…
வான்வெளியைப் பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அழியும் பொருளோடு…
அழியாத பேரழகு…
சேர்ந்தவிதம் எங்ஙனமோ…
தெய்வங்கள் உரையாடும்…
தெய்வங்கள் உரையாடும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : சாயம்போன வாழ்வோடு…
சட்டென்று நிறமூட்டும்…
காற்றினைத்து வைத்து…
காயவைத்து மணமூட்டும்…

பெண் : வரிவண்டு பசியாற…
வாவென்று தேனூட்டும்…
உண்டாடிய களைப்பாற…
உள்வீட்டில் மஞ்சமிடும்…

பெண் : குலமகளின் குழல் சேர்ந்தால்…
குலம் வளர்க்கும் பொருளாகும்…
பூக்கூடை சேர்ந்தாலோ…
பூக்காரி உணவாகும்…

—BGM—

பெண் : சந்நிதி சேர்ந்தாலோ…
சாமிக்கு வரமாகும்…
சருகாய்ப் போனாலும்…
பூமிக்கு உரமாகும்…

பெண் : மணங்கொள்ளும் மேடையிலே…
மங்கலத்தின் மணமாகும்…
படமாகும் வேளையிலோ…
படைக்கின்ற சரமாகும்…

பெண் : சின்னஞ்சிறு பூவோடு…
என்னென்ன பெருவாழ்வு…
நூற்றாண்டு வாழ்வோடு…
நமக்குண்டா பூவாழ்வு…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…


Notes : Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாளை ஒரு பூ மலரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading