Tag Archives: டி.கே.எஸ்.கலைவாணன்

போற்றிப் பாடடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.கே.எஸ்.கலைவாணன் & மனோஇளையராஜாதேவர் மகன்

Potri Paadadi Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

BGM

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : மத்தவங்க கண்ணு படும்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்…
மத்தவங்க கண்ணு படும்…
அந்த கதை இப்ப உள்ள…
சந்ததிங்க கேட்க வேணும்…

ஆண் : நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை…
மானம் இழந்தாலே வாழ தெரியாதே…
பெரிசல்லாம் சொன்னாங்க…
சொன்னபடி நின்னாங்க…
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

BGM

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : இன்னாருன்னு கண்டு கொள்ள…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்…
இன்னாருன்னு கண்டு கொள்ள…
ஏடெடுத்து எழுதி சொல்ல…
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல…

ஆண் : முக்குலத்தோர் கல்யானந்தேன்…
முத்து முத்து கம்பலந்தேன்…
எக்குலமும் வாழ்த்து சொல்லும்…
எங்களுக்கு எக்காளம்தேன்…

ஆண் : அழகான சரிஜோடி…
ஆணைமேல அம்பாரி…
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…


Notes : Potri Paadadi Penne Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. போற்றிப் பாடடி பாடல் வரிகள்.