சொர்க்கமே என்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாஊரு விட்டு ஊரு வந்து

Sorgame Endralum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே தந்தன தந்தன தந்தா…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

—BGM—

பெண் : ஏரிக்கரை காத்தும்…
ஏலேலோ பாட்டும்…
இங்கே ஏதும் கேட்கவில்லையே…

ஆண் : பாடும் குயில் சத்தம்…
ஆடும் மயில் நித்தம்…
பார்க்க ஒரு சோலையில்லையே…

பெண் : வெத்தலைய மடிச்சு…
மாமன் அதைக் கடிச்சு…
துப்ப ஒரு வழியில்லையே…

ஆண் : ஓடி வந்து குதிச்சு…
முங்கி முங்கிக் குளிக்க…
ஆட ஒரு ஓடையில்லையே…

பெண் : இது ஊரு என்ன ஊரு…
நம்மூரு ரொம்ப மேலு…

ஆண் : அட ஓடும் பல காரு…
வீண் ஆடம்பரம் பாரு…

பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…

பெண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…

ஆண் : அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

—BGM—

ஆண் : மாடு கண்ணு மேய்க்க…
மேயிறதைப் பாா்க்க…
மந்தைவெளி இங்கே இல்லையே…

பெண் : ஆடு புலி ஆட்டம்…
போட்டு விளையாட…
அரச மரம் மேடை இல்லையே…

ஆண் : காளை ரெண்டு பூட்டி…
கட்ட வண்டி ஓட்டி…
கானம் பாட வழியில்லையே…

பெண் : தோழிகளை அழைச்சு…
சொல்லிச் சொல்லி ரசிச்சு…
ஆட்டம் போட முடியலையே…

ஆண் : ஒரு எந்திரத்தை போல…
அட இங்கு உள்ள வாழ்க்கை…

பெண் : இத எங்கே போயி சொல்ல…
மனம் இஷ்டப்படவில்லை…

ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை…

பெண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…

ஆண் : அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
ஆண் & பெண் : அது நம்மூரைப் போல வருமா…

ஆண் : அட என் நாடு என்றாலும்…
ஆண் & பெண் : அது நம் நாட்டுக்கீடாகுமா…

—BGM—


Notes : Sorgame Endralum Song Lyrics in Tamil. This Song from Ooru Vittu Ooru Vanthu (1990). Song Lyrics penned by Gangai Amaran. சொர்க்கமே என்றாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading