சிவகாமி நெனப்பினிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகிளிப்பேச்சு கேட்க வா

Sivagami Ninaipiniley Song Lyrics in Tamil


ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

BGM

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

ஆண் : முக்கனியே சர்க்கரையே…
ஒத்தையிலே நிக்குறியே…

பெண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்து விட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

BGM

ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா…
இல்லை ஏசுமா…
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக் கூடுமா…
விட்டு ஓடுமா…

பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா…
என்னைப் பார்க்கவா…
காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா…
மையல் தீர்க்கவா…

ஆண் : போதும் இது போதும்…
இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே…

பெண் : மோதும் அலை மோதும்…
நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம…

ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

பெண் : எம்மனச ஒட்டுறியே…
மம்முட்டிப் போல் வெட்டுறியே…

ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

BGM

பெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது…
வந்து சேர்ந்தது…
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது…
பொண்ணு நாணுது…

ஆண் : தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா…
பசி நீங்குமா…
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா…
சுகம் மீறுமா…

பெண் : பேசி வலை வீசி…
இந்த மனசுல போதைய ஏத்தாதே…

ஆண் : ராசி நல்ல ராசி…
நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே…

பெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ…
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

பெண் : எம்மனச ஒட்டுறியே…
மம்முட்டிப் போல் வெட்டுறியே…

ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
பெண் : என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்து விட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…


Notes : Sivagami Ninaipiniley Song Lyrics in Tamil. This Song from Kilipetchu Ketkava (1993). Song Lyrics penned by Vaali. சிவகாமி நெனப்பினிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading