சிறகுகள் வந்தது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜாவேத் அலி & மது ஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Siragugal Vanthathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…

ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள…
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள…
சுகங்களும் கூடுது உன்னை தேடியே…

பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல…
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்…
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ…

பெண் : உன்னை உன்னை தேடி தானே…
இந்த ஏக்கம் இந்த பாதை…
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…

ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள…
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள…
சுகங்களும் கூடுது உன்னை தேடியே…

பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : ஆஆஹா… ஆஆஹா…
ஆஆஹா… ஆஆஹா…

—BGM—

ஆண் : ஓ… நதியே நீ எங்கே என்று…
கரைகள் தேட கூடாதா…
நிலவே நீ எங்கே என்று…
முகில்கள் தேட கூடாதா…

பெண் : ஓ… மழை இரவினில் குயிலின் கீதம்…
துடிப்பதை யார் அறிவார்…
கடல் மடியினில் கிடக்கும் பலரின்…
கனவுகள் யார் அறிவார்…

ஆண் : அழகே நீ எங்கிருக்கிறாய்…
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்…
உயிரே நீ என்ன செய்கிறாய்…
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்…

பெண் : அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே…
பூவின் உள்ளே நிலவின் மேலே…
தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே…

பெண் : உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்…
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்…
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே…

—BGM—

ஆண் : ஓஓ… எனக்கே நான் சுமையாய் மாறி…
என்னை சுமந்து வந்தேனே…
உனக்கே நான் நிழலாய் மாறி…
உன்னை தேடி வந்தேன்…

பெண் : விழி நனைந்திடும் நேரம் பார்த்து…
இமை விலகுகி விடாது…
உயிர் துடித்திடும் முன்னே எந்தென்…
உயிர் ஒதுக்கி விடாது…

ஆண் : உலகம் ஒரு புள்ளியாகுதே…
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே…
உயிரில் ஒரு பூ வெடிக்குதே…
சுகமோ வழியோ எல்லை மீறுதே…

—BGM—

ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…

ஆண் : ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க…
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக…
இடையினில் எப்படி கனவும் காணுமோ…

பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல…
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்…
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ…

பெண் : உன்னை உன்னை தேடி தானே…
இந்த ஏக்கம் இந்த பாதை…
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…

—BGM—


Notes : Siragugal Vanthathu Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. சிறகுகள் வந்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading