செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & பிரகதி குருபிரசாத்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Sevvandhi Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

—BGM—

ஆண் : அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி…
வட்டி அசலுக்கு மேல போட்டுதாரேன்…

பெண் : உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா…
இரவுக்கு என்ன கடனாதாரேன்…

ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்…
பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்…

ஆண் : தள்ளி போடாதே…
பெண் : தாப்பா போடாதே… ஏ…

—BGM—

பெண் : உன்னை பிள்ளை செய்வேன்…
கொஞ்சம் தொல்லை செய்வேன்…
கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன்…

ஆண் : வீட்டில் வேலை செய்வேன்…
தோட்டம் தூய்மை செய்வேன்…
சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன்…

பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா…
ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா…

பெண் : சற்று தள்ளி போ…
ஆண் : நேரம் சொல்லி போ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வான தீவே…
தேனாகி வந்தாய் முன்னாலே…
ஆணாகி போனேன் உன்னாலே…

பெண் : என் வீட்டுகாரா…
தென்னாட்டு தீரா…
கண்ணாக வந்தாய் முன்னாலே…
பெண்ணாகி போனேன் உன்னாலே…

—BGM—


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading