செவக்காட்டு சீமையெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆர்.குரு அய்யாதுரைதிபு நின்னன் தாமஸ்நெஞ்சுக்கு நீதி

Sevakkaattu Seemaiellaam Song Lyrics in Tamil


ஆண் : அரிச்சந்திர மாமன்னர் ஆட்சியில் நடந்ததென்னவோ…
சத்தியமே சோதனையாய் சரிந்து கீழே விழுந்ததென்னவோ…
சகத்தோரே உணர்ந்திடுவீர்…
சகலரும் வந்து சேரும் இடுகாட்டு மத்தியிலே…
இருக்கின்றதோ ஐயோ எங்கே தேடுவேன்…

ஆண் : ஏறாத மலை ஏறி…
இறங்காத கடல் இறங்கி…
வடிக்காத கண்ணீர் விட்டு ஓடினேன்…
தேடினேன் ஓடினேன்…
கண்ணே மணியே என்று உன்னை நாடுவேன்…

—BGM—

ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திர ராசா…
அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா…

ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல…
பொக பொகயா போனாரே…
எல்லாத்தையும் எழந்த பொறவு…
ஈம காட்ட சேந்தாரே…

ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…

—BGM—

ஆண் : பட்டாட குப்பையிலே…
பல்லாக்குமே வீதியிலே…
எட்டூரு சுத்தி வந்தோம் பட்டினிக்கு சோறுயில்லே…

—BGM—

ஆண் : கண் போக காட்சியில்லே…
கால் போக ஊருமில்லே…
மண்ணாகி போன பின்னே மானிடருக்கு சாதியில்லே…

ஆண் : பஞ்சாங்க நூலு தான் பள்ளம் தோண்டுதே…
அன்னாடங்காய்ச்சிய குத்தி சாய்க்குதே…

ஆண் : கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி…
கொட்டுன்னு தானே சொன்னாங்க…
கூரயுமில்லா வீட்டுல வாழும்…
எங்களை எதுக்கு கொன்னாங்க…

ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…

—BGM—

ஆண் : மும்மாரி பெய்யுதுங்க…
மூணு போகம் விளையுதுங்க…
ஒப்பாரி வைக்கும் சனம்…
ஒசர வழி தெரியலைங்க…

—BGM—

ஆண் : முள்ளோடு பூவிருக்கு…
முத்தத்துல நெலவிருக்கு…
கல்லான கடவுளுக்கே கருணை அது எங்கிருக்கு…

ஆண் : கற்பூரம் ஏத்தியும் கண்ண காட்டலே…
நெய் சோற போட்டுமே மண்ண காக்கல…

ஆண் : பொய்யில உண்ம பொசுங்கி போக…
எத்தன சட்டம் அம்மாடி…
நீதிய காசுக்கு வாங்குற மனுசன்…
நிக்கிறான் பாரு முன்னாடி…

—BGM—

ஆண் : செவக்காட்டு…
குழு : சீமையெல்லாம்…
ஆண் : ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…
குழு : அரிச்சந்திரா ராசா…
ஆண் : அரசாண்ட நாட்ட விட்டே…
குழு : நாட்ட விட்டே…
ஆண் : நகர்ந்தாரே செல்லா காசா…

ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல…
பொக பொகயா போனாரே…
எல்லாத்தையும் எழந்த பொறவு…
ஈம காட்ட சேந்தாரே…

—BGM—

ஆண் : அரிச்சந்திரா ராசா…

—BGM—


Notes : Sevakkaattu Seemaiellaam Song Lyrics in Tamil. This Song from Nenjuku Needhi (2022). Song Lyrics penned by Yugabharathi. செவக்காட்டு சீமையெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading