கனவிலே கனவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்யன் & ஸ்வேதா மோகன்ஸ்ரீகாந்த் தேவாநேபாளி

Kanavilae Kanavilae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…

ஆண் : அவள் என் வாசமே என் சந்ததியாய்…
எட்டு திசைகளும் அதிருமே…

—BGM—

ஆண் : சிறு புன்னகையில் என்னை வென்றுவிடும்…
அவள் தென்றலே…
இரு கண்களையும் எழில் செய்துவிடும்…
அவள் மின்னலே…

பெண் : காலை மாலை யாவுமே…
காதல் கொள்ள வேணுமே…
தினம் பேசி போகிற ஜாடைகள்…
பல நூறு கவி சொல்லுதே…

ஆண் : இரவே பகலே இரவாய் தோன்றிடு…
இரவே இரவே பகலை நீங்கிடு…

பெண் : மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே…
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே…

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…

—BGM—

ஆண் : உடை தொட்ட இடம்…
விரல் தொட்டு விட உயிர் கெஞ்சுமே…
அடைபட்ட நதி உடைபட்டுவிட…
அலை பொங்குமே…

பெண் : வாசம் வீசும் பூவிலே…
நாளும் உந்தன் வாசனை…
மிதமான சூரிய தீபமாய்…
இமை நான்கு மொழி சொன்னதே…

ஆண் : எது நீ எது நான்…
இனிமேல் தேடுவோம்…
நதி நீ கரை நான்…
கலந்தே ஓடுவோம்…

பெண் : பூக்கள் முழுவதும் தீண்டும் விழியிலே…
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே…

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…

ஆண் : அவள் என் வாசமே என் சந்ததியாய்…
எட்டு திசைகளும் அதிருமே…

—BGM—


Notes : Kanavilae Kanavilae Song Lyrics in Tamil. This Song from Nepali (2008). Song Lyrics penned by Yugabharathi. கனவிலே கனவிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading