செப்டம்பா் மாதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லே & ஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

September Madham Song Lyrics in Tamil


ஆண் : துன்பம் தொலைந்தது எப்போ…
இன்பம் தொலைந்தது எப்போ… ஹே…

பெண் : துன்பம் தொலைந்தது எப்போ…
இன்பம் தொலைந்தது எப்போ… ஹே…

BGM

பெண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…
செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

குழு : துன்பம் தொலைந்தது எப்போ…
பெண் : காதல் பிறந்ததே அப்போ…
குழு : இன்பம் தொலைந்தது எப்போ…
பெண் : கல்யாணம் முடிந்ததே அப்போ…

ஆண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…
அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

குழு : துன்பம் தொலைந்தது எப்போ…
ஆண் : காதல் பிறந்ததே அப்போ…
குழு : இன்பம் தொலைந்தது எப்போ…
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ…

BGM

ஆண் : ஹே… பெண்ணே காதல் என்பது இனிக்கும் விருந்து…
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஹே கண்ணே…

பெண் : ஓ… நிறையை மட்டுமே காதல் பாா்க்கும்…
குறையை மட்டுமே கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா…

ஆண் : காதல் பாா்ப்பது பாதி கண்ணில்…
கல்யாணம் பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே…

பெண் : கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்றால்…
ரசிக்கும் ரசிக்கும் காதல்…
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக…
ஏன் ஏன் ஏன் மோதல்…

பெண் : பெண்கள் இல்லாமல்…
ஆண்களுக்காறுதல் கிடைக்காது…

ஆண் : பெண்களே உலகில் இல்லையென்றால்…
ஆறுதலே தேவை இருக்காது…

ஆண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…

BGM

ஆண் : அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…

BGM

பெண் : நான் கண்டேன்…
காதல் என்பது கழுத்தில் சங்கிலி…
கல்யாணம் என்பது காலில் சங்கிலி…
என் செய்வேன்…

ஆண் : கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு…
தொண்ணுாறு வரைக்கும் பூவை தாடு வா அன்பே…

பெண் : காதல் பொழுதில் விரும்பும் குறும்பு…
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா…

ஆண் : பிாிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை…
காதல் காதல் அதுதான்…
உறவோடு சிலகாலம் பிாிவோடு சிலகாலம்…
நாம் வாழ்வோம் வா வா…

ஆண் : ஆண்கள் இல்லாமல்…
பெண்களுக்காறுதல் கிடைக்காது…

பெண் : ஆண்களே உலகில் இல்லையென்றால்…
ஆறுதலே தேவை இருக்காது…

ஆண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

ஆண் : அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

குழு : துன்பம் தொலைந்தது எப்போ…
பெண் : காதல் பிறந்ததே அப்போ…
குழு : இன்பம் தொலைந்தது எப்போ…
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ…


Notes : September Madham Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. செப்டம்பா் மாதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading