சாத்து நடை சாத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஆஷா போஸ்லேஇளையராஜாசேதுபதி ஐ.பி.எஸ்

Saathu Nada Saathu Song Lyrics in Tamil


BGM

பெண் : இப்போ சாத்து நடை சாத்து…
குளிர் காத்து காப்பாத்து…
கைய கோர்த்து கைய கோர்த்து…
இடம் பார்த்து கொடியேத்து…

BGM

பெண் : இப்போ சாத்து நடை சாத்து…
குளிர் காத்து காப்பாத்து…
கைய கோர்த்து கைய கோர்த்து…
இடம் பார்த்து கொடியேத்து…

BGM

பெண் : காணாத கண்ணும் கண்ணல்ல…
கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல…
வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல…
விலை தந்து வாங்கும் பொன்னல்ல…

பெண் : விரசமோ சரசமோ எனக்கு ஓர் அவசரம்…
விஷயத்தை முடித்திட தொடங்கினேன் நாடகம்…
எண்ணிக்கை இல்லாத கேளிக்கை தானிங்கே
உண்டாகும் இன்பத்தில் எல்லோருக்கும் ஓர் பங்கே…

BGM

பெண் : இப்போ சாத்து நடை சாத்து…
குளிர் காத்து காப்பாத்து…
கைய கோர்த்து கைய கோர்த்து…
இடம் பார்த்து கொடியேத்து…

BGM

பெண் : இப்போ சாத்து நடை சாத்து…
குளிர் காத்து காப்பாத்து…

BGM

பெண் : நீ போடு காதல் விண்ணப்பம்…
கிடைக்காது வேற சந்தர்ப்பம்…
நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான்…
அழகாக பாடும் ஏஞ்சல் நான்…

பெண் : தரையிலே தரிசனம் தருகிற நிலவிது…
அறையிலே அபிநயம் புரிகிற மலரிது…
செக்காக என் பின்னே சுத்தாத ஆள் இல்லை…
எல்லாரும் என் பேரை சொல்லாத நாள் இல்லை…

BGM

பெண் : இப்போ சாத்து நடை சாத்து…
குளிர் காத்து காப்பாத்து…
கைய கோர்த்து கைய கோர்த்து…
இடம் பார்த்து கொடியேத்து…

BGM

பெண் : இப்போ சாத்து நடை சாத்து…
குளிர் காத்து காப்பாத்து…
இப்போ சாத்து நடை சாத்து…


Notes : Saathu Nada Saathu Song Lyrics in Tamil. This Song from Sethupathi IPS (1994). Song Lyrics penned by Vaali. சாத்து நடை சாத்து பாடல் வரிகள்.


Scroll to Top