| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | தமன் எஸ் & லட்சுமி மேகனா | தமன் எஸ் | ரசவாதி |
Saaral Saaral Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உள்ளே பரவும் ஒரு மின்னல்…
உன் நிழலாய் தெரியுதடா…
என்னை மறந்து சிரிக்கின்றேன்…
பொன் உலகம் விடியுதடா…
பெண் : உள்ளே பரவும் ஒரு மின்னல்…
உன் நிழலாய் தெரியுதடா…
என்னை மறந்து சிரிக்கின்றேன்…
பொன் உலகம் விடியுதடா…
பெண் : கண்ணீர் சேற்றில் புதைந்த கால்களை…
காலம் அழகாய் மீட்கிறதே…
விண்மீன் ஊஞ்சலை ஆட்டும் காதலின்…
வாழ்வின் இசையை கேட்கிறதே…
பெண் : கலைந்த கனவுகள் மீண்டும் வேர்களில் பூக்குதே…
அணைந்த விளக்கிளும் ஆசை ஒளிச்சுடர் நீட்டுதே…
பெண் : சாரல் சாரல் சாரல்…
என் உள்ளே நெஞ்சின் சாரல்…
சாரல் சாரல் சாரல் நீ சாரல்…
பெண் : தூறல் தூறல் தூறல்…
என் உள்ளே அன்பின் தூறல்…
தூறல் தூறல் தூறல் பொன் தூறல்…
—BGM—
பெண் : அன்று நடந்த ராத்திரியில்…
வெள்ளி நிலவென வந்தாயே…
அள்ளி வழங்கிய அன்பினிலே…
என்றும் எனக்கு நீ அளித்தாய்…
பெண் : கூட்டி கழிக்க முடியா உன்னை…
எந்த கணக்கினில் வைப்பேனோ…
கோட்டை சுவரில் இனிமேல் நானும்…
கொன்றை பூவென பூப்பேனோ…
பெண் : மனமே பனியாய் மாறுது…
எனக்குள்ளயே எழுதே வானவில்…
பெண் : போதும் போதும் போதும்…
பூ பூக்கும் அன்பே போதும்…
போதும் போதும் போதும் முப்போதும்…
பெண் : போதும் போதும் போதும்…
தாலாட்டும் அன்பே போதும்…
போதும் போதும் போதும் எப்போதும்…
—BGM—
Notes : Saaral Saaral Song Lyrics in Tamil. This Song from Rasavathi (2024). Song Lyrics penned by Yugabharathi. சாரல் சாரல் பாடல் வரிகள்.
