ரிஷிவனம்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நரேஷ் ஐயர் & சின்மயிமணி சர்மாசாகுந்தலம்

Rishivanamthane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…
அரும்பு நெஞ்சாக இளைத்த பெண்மை…
கரும்பு வில்லாலே துளைத்த மன்னன் நீ…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கக்லோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வனமெல்லாம் பூக்கள் பூத்து கூடிடும் சதா…
அதனின் வாசத்தில் உன்னை பார்க்கிறேன்…

ஆண் : வனத்திலே நானும் வேட்டைக்காரனாய் உலா…
காமன் வேலாலே நானும் வீழ்கிறேன்…

பெண் : பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே…
ஆண் : சுந்தரி உன்னால்தானடி…

பெண் : என்னை பார்த்து தேனியாவும் தாக்க…
ஆண் : உன்னை தேனாய் நினைத்தேதான்…

ஆண் : வண்ண பெண்ணே மாலை கொண்டேன் நானே…
வெற்றி தேரில் நான் பறந்தேன்…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…

BGM

பெண் : கனவு நதி ஓடி அது தாவி வருமே…
விதியின் கடலில் சேர்த்திடுமே…

ஆண் : மாலினி ஓரம் நீ வசித்த காலமே…
போதும் பூவே வா தீண்டவா…

ஆண் : எல்லை இல்லா இவ்வானம் பூமி…
பெண் : நமக்காய் காத்து கிடக்க…

ஆண் : கள்ளம் இல்ல புத்தம் புது பூமி…
பெண் : தினமும் வாழ்த்து சொல்லுமே…

ஆண் : விடியல் இல்லா வெண்ணிலா வா வா…
ராஜானை ஆளும் ராணியே நீ வா…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…


Notes : Rishivanamthane Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. ரிஷிவனம்தானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading