ராஜா என்பார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபுவனா ஒரு கேள்விக்குறி

Raja Enbaar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்…
ராஜ்ஜியம் இல்லை ஆள…
ஒரு ராணியும் இல்லை வாழ…

ஆண் : ஒரு உறவும் இல்லை…
அதில் பிரிவும் இல்லை…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்…

ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்…
ராஜ்ஜியம் இல்லை ஆள…
ஒரு ராணியும் இல்லை வாழ…

—BGM—

ஆண் : கல்லுக்குள் ஈரமில்லை…
நெஞ்சுக்கும் இரக்கமில்லை…
ஆசைக்கு வெட்கம் இல்லை…
அனுபவிக்க யோகமில்லை…

ஆண் : கல்லுக்குள் ஈரமில்லை…
நெஞ்சுக்கும் இரக்கமில்லை…
ஆசைக்கு வெட்கம் இல்லை…
அனுபவிக்க யோகமில்லை…

ஆண் : பைத்தியம் தீர வைத்தியம் இல்லை…
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை…

ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்…
ராஜ்ஜியம் இல்லை ஆள…
ஒரு ராணியும் இல்லை வாழ…

—BGM—

ஆண் : நிலவுக்கு வானம் உண்டு…
மலருக்கு வாசம் உண்டு…
கொடிக்கென்று கிளையுமுண்டு…
எனக்கென்று என்ன உண்டு…

ஆண் : நிலவுக்கு வானம் உண்டு…
மலருக்கு வாசம் உண்டு…
கொடிக்கென்று கிளையுமுண்டு…
எனக்கென்று என்ன உண்டு…

ஆண் : ஏன் படைத்தானோ இறைவனும் என்னை…
மனதில் எனக்கு நிம்மதி இல்லை…

பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்…
ராஜ்ஜியம் உனக்கு உண்டு…
ஒரு ராஜகுமாரன் உண்டு…

பெண் : நல்ல உறவு உண்டு…
அதில் பரிவு உண்டு…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்…

—BGM—

பெண் : தெய்வத்தில் உன்னைக் கண்டேன்…
தினம் தினம் பூஜை செய்தேன்…
நிலவுக்குக் கலங்கம் என்று…
உறவுக்கு விலகி நின்றேன்…

பெண் : தெய்வத்தில் உன்னைக் கண்டேன்…
தினம் தினம் பூஜை செய்தேன்…
நிலவுக்குக் கலங்கம் என்று…
உறவுக்கு விலகி நின்றேன்…

பெண் : மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ…
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு…

பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்…
ராஜ்ஜியம் உனக்கு உண்டு…
ஒரு ராஜகுமாரன் உண்டு…

பெண் : நல்ல உறவு உண்டு…
அதில் பரிவு உண்டு…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்…


Notes : Raja Enbaar Song Lyrics in Tamil. This Song from Bhuvana Oru Kelvi Kuri (1977). Song Lyrics penned by Panchu Arunachalam. ராஜா என்பார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading