ரகசியமானது காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் சாகர்ஹரிணி & ஹரிஷ் ராகவேந்திராசிற்பிகோடம்பாக்கம்

Ragasiyamanathu Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…

—BGM—

ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் கனமானது…
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது…
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது…
இந்த சோகம்தானே காதலிலே சுகமானது…

ஆண் : வாசனை வெளிச்சத்தை போல…
அது சுதந்திரமானதும் அல்ல…
ஈரத்தை இருட்டினை போல…
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல…

ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…

—BGM—

பெண் : கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது…
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது…
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது…
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது…

பெண் : நீரினை நெருப்பினைப் போல…
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…
காதலும் கடவுளை போல…
அதை உயிரினில் உணரனும் மெல்ல…

பெண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

பெண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…


Notes : Ragasiyamanathu Kadhal Song Lyrics in Tamil. This Song from Kodambakkam (2006). Song Lyrics penned by Vijay Sagar. ரகசியமானது காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading