ராகங்கள் பதினாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம். எஸ். விஸ்வநாதன்தில்லு முல்லு

Ragangal Pathinaru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…

—BGM—

ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…

ஆண் : பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…

ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…

—BGM—

ஆண் : கலை மாது தான் மீட்டும் இதமான வீணை…
கனிவான ஸ்வரம் பாட பதமானது…
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை…
கனிவான ஸ்வரம் பாட பதமானது…

ஆண் : அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட…
ஆதார சுதி கொண்ட வீணையம்மா…
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட…
ஆதார சுதி கொண்ட வீணையம்மா…

ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…

—BGM—

ஆண் : இடையாட வளையாட சலங்கைகள் ஆட…
இலையோடு கொடி போல நடமாடினாள்…
இடையாட வளையாட சலங்கைகள் ஆட…
இலையோடு கொடி போல நடமாடினாள்…

ஆண் : உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்…
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா…
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்…
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா…

ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…

ஆண் : பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…
ஆ… பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…

ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…


Notes : Ragangal Pathinaru Song Lyrics in Tamil. This Song from Thillu Mullu (1981). Song Lyrics penned by Kannadasan. ராகங்கள் பதினாறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading