பிரபலமாகவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சித்தார்த்சந்தோஷ் நாராயணன்எனக்குள் ஒருவன்

Prabalamagavey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதய ஆசைகள் நினைவு ஆனதே…
உதயம் ஆகிறேன் இனிமையாகவே…

ஆண் : சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன்…
சுகமும் கோடிகள் அடைந்து வாழ்கிறேன்…
ஆழம் தேடிடும் மீன்களை போலே…
நீலக் கடலிலே நீந்தி போகிறேன்…

ஆண் : சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே…
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே…
பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி…
வெற்றி பிரதிபளிக்குதே…

ஆண் : பிரபலமாகவே பிறந்த ஆளுடா…
புதிய பாதையை திறக்கிறேன்…
உலக மேடையில் உதித்த ஆணடா…
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்…

—BGM—

ஆண் : பழைய பாணிகள் புதிய பாணிகள்…
கரைத்து பூசிய கலைஞன் நானடா…

ஆண் : பற்றட்டும் என் சாலையில் பணிகள் மூட்டமே…
டிக்கெட்டும் கூடட்டும் ரசிகர் கூட்டமே…

ஆண் : ஆழம் தேடிடும் மீன்களை போலே…
நீலக் கடலிலே நீந்தி போகிறேன்…

ஆண் : சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே…
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே…
பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி…
வெற்றி பிரதிபளிக்குதே…

ஆண் : பிரபலமாகவே பிறந்த ஆளுடா…
புதிய பாதையை திறக்கிறேன்…
உலக மேடையில் உதித்த ஆணடா…
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்…

—BGM—

ஆண் : என்னை ரசிக்கிறேன்…
எனக்குள் மிதக்கிறேன்…
கைகள் முறுக்கியே கர்வம் அழைக்கிறேன்…

ஆண் : சிந்தும் ஒளியிலே சித்திரம் விதைக்கிறேன்…
சங்கத் தமிழிலே சந்தம் தருகிறேன்…

ஆண் : பிரபலமாகவே பிறந்த ஆளுடா…
புதிய பாதையை திறக்கிறேன்…
உலக மேடையில் உதித்த ஆணடா…
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்…

—BGM—


Notes : Prabalamagavey Song Lyrics in Tamil. This Song from Enakkul Oruvan (2015). Song Lyrics penned by Muthamil. பிரபலமாகவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading