போதவில்லையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல் & சக்தி அமரன்டி. இமான்முடிஞ்சா இவன புடி

Pothavillaye Song Lyrics in Tamil


BGM

பெண் : போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…
போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

பெண் : நாள் முழுக்க உன்னை…
கண்கள் தின்ற பின்னும்…
உந்தன் சொற்கள் மீது…
நான் நனைந்த பின்னும்…

பெண் : இன்னும் இன்னும் பக்கம் வந்தும்…
கிட்ட தட்ட ஒட்டி கொண்டும்…
மூச்சில் தீயும் பற்றி கொண்டும்… ம்ம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…
போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

BGM

ஆண் : தேநீரை நாம் உறிஞ்சும்…
மாலை போதாதே…
கை கோர்த்து போகும்…
இந்த சாலை போதாதே…

ஆண் : என் எண்ண விண்கலம்…
நான் சொல்லவே…
கைபேசி மின்கலம் போதாதடி…

ஆண் : உன் அழகை பருக…
என் கண்கள் போதாதடி…
என் நிலையை எழுத…
வானங்கள் போதாதடி…

ஆண் : நேர முள்ளை பின் இழுத்தும்…
வாரம் எட்டு நாள் கொடுத்தும்…
சுற்றும் பூமியை தடுத்துமே… ஹே…

ஆண் : போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

BGM

பெண் : கூழாங்கல் கூவுகின்ற…
கானம் போதாதே…
கூசாமல் கூடுகின்ற…
நாணம் போதாதே…

பெண் : தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்…
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா…

பெண் : நம் கனவை செதுக்க…
பிறந்தும் போதாதுடா…
இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா…

பெண் : குட்டி குட்டி கோவம் கொண்டு…
கட்டி முட்டி மோதி கொண்டு…
திட்டி திட்டி தீர்த்த பின்னும்…

பெண் : போதவில்லையே போதவில்லையே…

ஆண் : உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

பெண் : சுவாச பையில் உந்தன்…
வாசம் பூட்டி வைத்தும்…
நெஞ்ச ஏட்டில் இன்னும்…
உன் பேரை தீட்டி வைத்தும்…

ஆண் : பாடல் தீர்ந்து போன பின்னும்…
மௌனம் கூட தீர்ந்த பின்னும்…
கோடி முத்தம் வைத்த பின்னும்… ம்ம்…

பெண் : போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…


Notes : Pothavillaye Song Lyrics in Tamil. This Song from Mudinja Ivana Pudi (2016). Song Lyrics penned by Madhan Karky. போதவில்லையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading