பூங்குருவி பாடடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோதீபக்சுந்தர காண்டம்

Poonkuruvi Paadadi Song Lyrics in Tamil


ஆண் : பட்டு பூச்சி வாழ்க்கையது எட்டு நாள்தானே…
பறந்து வரும் ஈசலுக்கு ஒருநாள்தானே…
அவை பறக்கலையா… சிறகு விரிக்கலையா…
வாழ்வை ரசிக்கலையா…

—BGM—

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…
பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

ஆண் : வாழ்க்கையே ஒரு வரவு செலவு…
வந்ததே ஒரு வரவுதான்…
பூமியில் வந்த கணக்கு முடிஞ்சு…
போகிறோம் அது செலவுதான்…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

—BGM—

ஆண் : கண்ணிமைக்கும் வேளை வானவில்லின் வாழ்க்கை…
அதையெண்ணி வானவில் அழலாமா…
அழகியகோலம் கெடலாமா…

—BGM—

ஆண் : நூலுமில்லை அங்கே வாலுமில்லை இங்கே…
பறக்குது வாழ்வெனும் காத்தாடி…
அடிக்கிற காற்றின் திசைதேடி…

ஆண் : இன்று யார் இனி நாளையார்…
அதை யார்சொல்வது…
வாழும்நாள் வரை வாழுவோம்…
விதி யார்வெல்வது…

ஆண் : ஆனது ஆகட்டும் பார்ப்போம்…
என வாழும் மனம் வேண்டும்…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

—BGM—

ஆண் : பூப்பதொரு காலம்… காய்ப்பதொரு காலம்…
இலையுதிர்காலமும் ஓர் காலம்…
என்றும் இல்லையே கார்காலம்…

—BGM—

ஆண் : காலமொரு ஓலை கொண்டுவரும் நாளை…
நடப்பது காலத்தின் ராஜாங்கம்…
மீறிட யாருக்கு அதிகாரம்…

ஆண் : மெய்யிலா உடல் ஒன்றையே இங்கு மெய்யென்கிறோம்…
கானலை ஒரு கங்கையாய் தினம் நாம் காண்கிறோம்…

ஆண் : பட்டினத்தார் அவர் போலே…
மனம் வேண்டும் இனி மேலே…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…
பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…

ஆண் : வாழ்க்கையே ஒரு வரவு செலவு…
வந்ததே ஒரு வரவுதான்…
பூமியில் வந்த கணக்கு முடிஞ்சு…
போகிறோம் அது செலவுதான்…

ஆண் : பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்…
மன பாரம் தீரதான்…


Notes : Poonkuruvi Paadadi Song Lyrics in Tamil. This Song from Sundara Kandam (1992). Song Lyrics penned by Pulamaipithan. பூங்குருவி பாடடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading