பூங்காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & பி.சுசீலாகங்கை அமரன்மண்ணுக்கேத்த பொண்ணு

Poongatre Antha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…

பெண் : பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…

BGM

ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்…
கன்னித் தமிழ் மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா…
ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்…
ஒன்னவிட்டு இன்னொரு பெண்ணை உள்ளம் ஏற்குமா…

பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே இங்கு எங்கும் இல்ல…
காத்த புடிச்சு கையில வைக்கும் ஆளும் இல்ல…
கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே…

ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…

BGM

பெண் : தென் மலைக்காத்து வீசுற போது…
ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே…
நெஞ்சில காதல் பொங்குற போது…
ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே…

ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல நல்ல உள்ளம் இல்ல…
உள்ளம் இருக்கும் வீட்டுல நல்ல செல்வம் இல்ல…
ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்…

பெண் : பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…

ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…

பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே…
ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…


Notes : Poongatre Antha Song Lyrics in Tamil. This Song from Mannukketha Ponnu (1985). Song Lyrics penned by Pulamaipithan. பூங்காத்தே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading