பூங்காற்றே இனி போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாபடிச்சபுள்ள

Poongaatre Ini Song Lyrics in Tamil


ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…

—BGM—

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…
நான் ஒன்று எண்ணித் தவிக்க…
தான் ஒன்று தெய்வம் நினைக்க…
துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே…
என் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…

—BGM—

ஆண் : நம் கானம் கேட்ட வானாடும் சோலை…
வீணில் வாடுது பார்த்தாயோ…
பொன் மாலை வேளை இங்கென்ன தேவை…
சோக சங்கீதம் கேட்டாயோ…

ஆண் : என் வாழ்வு மண் மீது போனாலும்…
உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்…
யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்…
வேர் போல ஆல் போல நீ வாழ்க…
அன்பே அன்பே என் இன்பம் எங்கே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…

—BGM—

ஆண் : காவேரி இங்கு ஓடோடி வந்து…
காதல் சங்கமம் ஆகாதோ…
பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல…
ஆசை தோன்றுது ஏதேதோ…

ஆண் : பூந்தென்றல் தீயாக வீசாதே…
என் ஜீவன் தானாக வாழாதே…
நான் என்றும் நீ என்றும் வேறானோம்…
நிலையாக ஓடாத தேரானோம்…
அன்பே அன்பே என் இன்பம் எங்கே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…
நான் ஒன்று எண்ணித் தவிக்க…
தான் ஒன்று தெய்வம் நினைக்க…
துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே…
என் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே…
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே…


Notes : Poongaatre Ini Song Lyrics in Tamil. This Song from Padicha Pulla (1989). Song Lyrics penned by Gangai Amaren. பூங்காற்றே இனி போதும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading