போகாதே போகாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Pogadhey Pogadhey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

ஆண் : உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும்…
கனவாய் என்னை மூடுதடி…
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது…
உயிரே உயிர் போகுதடி…
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து…
உந்தன் முகம் பார்ப்பேனடி…

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே… ஹே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

—BGM—

ஆண் : கலைந்தாலும் மேகம்…
அது மீண்டும் மிதக்கும்…
அது போல தானே…
உந்தன் காதல் எனக்கும்…

ஆண் : நடைபாதை விளக்கா காதல்…
விடிந்தவுடன் அணைப்பதற்கு…
நெருப்பாலும் முடியாதம்மா…
நினைவுகளை அழிப்பதற்கு…
உனக்காக காத்திருப்பேன்… ஓஓஹோ…
உயிரோடு பார்த்திருப்பேன்… ஓஓஹோ…

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

—BGM—

ஆண் : அழகான நேரம்…
அதை நீதான் கொடுத்தாய்…
அழியாத சோகம்…
அதையும் நீதான் கொடுத்தாய்…

ஆண் : கண் தூங்கும் நேரம் பார்த்து…
கடவுள் வந்து போனது போல்…
என் வாழ்வில் வந்தே ஆனாய்…
ஏமாற்றம் தாங்கலையே…
பெண்ணை நீ இல்லாமல்…
பூலோகம் இருட்டிடுதே…

ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…

—BGM—


Notes : Pogadhey Pogadhey Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. போகாதே போகாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading