பெட் லவ்வர்ஸ் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம்ராஜேஷ் வைத்யாஷாட் பூட் த்ரீ

Pet Lovers Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : பால் மழையின் தூரலில்…
வால் முளைத்த வானவில்…
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…

ஆண் : காலமெனும் காற்றிலே…
கால் முளைத்த கானமாய்…
உன் மேலே பாய்ந்திடுபோது ஆறுதல் ஆவான்…

ஆண் : கல்லுருகம் நேசமாய்…
பல் முளைத்த பாசமாய்…
இருதயம் அதை கவ்வி…
அவன் வானெருவான்…

ஆண் : உனை உனை உனை சேர்ந்தே…
உயிராய் மாறுவான்…
இருதயம் அதை கவ்வி…
அவன் வானெருவான்…

ஆண் : உனை உனை உனை சேர்ந்தே…
உயிரை மாறுவான்…

BGM

ஆண் : தீண்டலுக்கு ஏங்குவான்…
மார்பிலே தூங்குவான்…
அவன் தாய் போல் என்னை வேலை வாங்குவான்…

ஆண் : கட்டிலில் பாதியாய்…
என் தட்டிலே பாதியாய்…
என் வாழ்வை ஆளுவான்…

ஆண் : குறுஞ்சிரிப்பு தீட்டுவான்…
வேருலகைக் காட்டுவான்…
நான் விலகி போகையில்…
என் நிழல் என்றாகுவான்…

BGM

ஆண் : நாலுகால் நாயகன்…
தூறலாய் தூயவன்…
தலைகீழாய் என்னை மாற்றும் மாயவன்…

ஆண் : காலையில் சேயவன்…
மாலையில் சேவகன்…
என் காதல் காவலன்…

ஆண் : நான் பிரியும்போதிலே…
என் கால்நனைப்பவன்…
என் வருகைக்காகவே தினம் காத்திருப்பவன்…

ஆண் : இது வரை எனை யாரும் யாரும்…
காணாத விழிகளிலே…
இது வரை எனை யாரும் யாரும்…
கொஞ்சாத மொழிகளிலே…

ஆண் : மனதை தொடுவான்…
மனதை தொடுவான்…
மமதை தருவான்…
மமதை தருவான்…

ஆண் : எனது விழியோரம் ஈரம் நேரும்போது…
தானும் வாடுவான்…

ஆண் : பால் மழையின் தூரலில்…
வால் முளைத்த வானவில்…
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…

ஆண் : கல்லுருகம் நேசமாய்…
பல் முளைத்த பாசமாய்…

BGM

ஆண் : ஹி இஸ் மை பிரதர்…
வாட் ய லவ்லி சோல்…

BGM


Notes : Pet Lovers Anthem Song Lyrics in Tamil. This Song from Shot Boot Three (2023). Song Lyrics penned by Madhan Karky. பெட் லவ்வர்ஸ் அன்தம் பாடல் வரிகள்.


Scroll to Top