| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | சுசித்ரா | தினா | கண்ணும் கண்ணும் |
Pathinettu Vayasu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
பெண் : செடி நட்டதும் மலர்மொட்டுக்கள் விட உத்தரவிடுவோம்…
விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்…
இளம் கன்னியரின் வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம்…
எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்…
பெண் : பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
—BGM—
பெண் : சமையல்கார பெண்ணாக தமிழ் பொண்ணு நின்னாக…
அந்த காலம் போயே போச்சு…
சர்வதேச பெண்ணாக தமிழ் பொண்ணுக ஆனாக…
சாஸ்திரங்கள் போயே போச்சு…
பெண் : அப்பாவே அப்பாவே பெத்த பொண்ண திட்டாதே…
அம்மாவே அம்மாவே அட்வைஸ் பண்ணி கொல்லாதே…
சேலைபோனது ஜீன்ஸ் வந்தது காலத்தின் மாற்றம்…
பெண் : முதலை வாயில் நாக்கே இல்லை…
மூன்றாம் பிறையில் கரையே இல்ல…
பெய்யும் மழையில் உப்பே இல்ல…
பெண்கள் மனசில் தப்பே இல்ல…
பெண் : செடி நட்டதும் மலர்மொட்டுக்கள் விட உத்தரவிடுவோம்…
விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்…
இளம் கன்னியரின் வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம்…
எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்…
பெண் : பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
—BGM—
பெண் : வெளியில் வந்தா சந்தோஷம் வீட்டுக்குள்ளே சந்தேகம்…
எங்க பாடு பெரும்பாடு…
மேகம் தாண்டி போகலாம் வானம் தாண்ட முடியுமா…
தெரியும் எங்கள் எல்லைக்கோடு…
பெண் : கண்டாங்கி கண்டாங்கி சல்வாராகி போனாலும்…
தென்காசி தென்காசியில் தமிழ் பண்பு மாறாது…
ஸ்டிக்கர் உலகம் தோன்றியபின்னும் குங்குமம் இருக்கு…
பெண் : ஐஸ்வர்யா ராய் அழகை வாங்கு…
ஜான்சி ராணி வீரம் வாங்கு…
சானியா மிர்சா இளமை வாங்கு…
மூன்றும் சேர்த்து உலகை வாங்கு…
பெண் : செடி நட்டதும் மலர்மொட்டுக்கள் விட உத்தரவிடுவோம்…
விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்…
இளம் கன்னியரின் வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம்…
எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்…
பெண் : பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி… ஹோய்…
—BGM—
Notes : Pathinettu Vayasu Song Lyrics in Tamil. This Song from Kannum Kannum (2008). Song Lyrics penned by Vairamuthu. பதினெட்டு வயசு பாடல் வரிகள்.