மயில்தோகை அழைத்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம்லக்ஷ்மிகாந்த் பியாரேலால்ரகசிய போலீஸ்

Mayil Thogai Azhaithal Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…

ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

—BGM—

ஆண் : நதியே மண்மீது நீ நடந்தால்…
என் ஆசைப் பூக்கும்…
பறித்தால் செந்தேனைச் சேர்த்து…
பனிப்பூ என்மீது வார்க்கும்…

ஆண் : பாவை உடல் புல்லாங்குழல்…
மெதுவாய்த் தொடும் உன்மன்னன் விரல்…
தீராது ஆசைப் பாடல்…
தொடங்கும் தொடரும் தலைவன் கூடல்…

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…

ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…

—BGM—

ஆண் : கடலில் இல்லாத மீனும்…
கணையில் விழாத மானும்…
விழியில் கொண்டாடும் மாது…
விடுமோ அன்றாடம் தூது…

ஆண் : காமன் விழா காணும் நிலா…
மடிமேல் விழும் என்மஞ்சள்புறா…
மேலாடை சூடி ஆடும்…
மெதுவாய் புதிதாய் கவிதை பாடும்…

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…

ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…

—BGM—

Notes : Mayil Thogai Azhaithal Song Lyrics in Tamil. This Song from Ragasiya Police (1995). Song Lyrics penned by Vaali. மயில்தோகை அழைத்தால் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading