பச்சைக்கிளி முத்துச்சரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்உலகம் சுற்றும் வாலிபன்

Pachaikili Muthucharam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…

—BGM—

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…

—BGM—

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ… ஆஆஆ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

—BGM—

ஆண் : தத்தை போலத் தாவும்…
பாவை பாதம் நோகும் என்று…
மெத்தை போல பூவைத் தூவும்…
வாடைக் காற்றும் உண்டு…

பெண் : வண்ணச்சோலை வானம் பூமி…
யாவும் இன்பம் இங்கு…
இந்தக் கோலம் நாளும் காண…
நானும் நீயும் பங்கு…

ஆண் : கண்ணில் ஆடும் மாங்கனி…
கையில் ஆடுமோ…
கண்ணில் ஆடும் மாங்கனி…
கையில் ஆடுமோ…

பெண் : நானே தரும்…
நாளும் வரும்…
ஏனிந்த அவசரமோ…

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…

—BGM—

பெண் : மெல்ல பேசும் கள்ள பார்வை…
ஜாதி பூவின் மென்மை…
சொல்ல போகும் பாடல் நூறும்…
ஜாடை காட்டும் பெண்மை…

ஆண் : முள்ளில்லாத தாளை போல…
தோகை மேனி என்று…
அள்ளும் போது மேலும் கீழும்…
ஆடும் ஆசை உண்டு…

பெண் : அந்த நேரம் நேரிலே…
சொர்க்கம் தோன்றுமோ…
அந்த நேரம் நேரிலே…
சொர்க்கம் தோன்றுமோ…

ஆண் : காணாததும் கேளாததும்…
காதலில் விளங்கிடுமோ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

—BGM—

ஆண் : பொன்பட்டாடை மூடிச்செல்லும்…
தேன்சிட்டோடு மெல்ல…
நான் தொட்டாடும் வேளைதோறும்…
போதை என்ன சொல்ல…

பெண் : கை தொட்டாட காலம் நேரம்…
போகப் போக உண்டு…
கண்பட்டாலும் காதல் வேகம்…
பாதிப்பாதி இன்று…

ஆண் : பள்ளிக் கூடம் போகலாம்…
பக்கம் ஓடி வா…
பள்ளிக் கூடம் போகலாம்…
பக்கம் ஓடி வா…

பெண் : கூடம்தனில் பாடம் பெறும்…
காலங்கள் சுவையல்லவோ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…

—BGM—


Notes : Pachaikili Muthucharam Song Lyrics in Tamil. This Song from Ulagam Sutrum Valiban (1973). Song Lyrics penned by Vaali. பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading