பாசமுள்ள சூரியனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணவை பொன்மாணிக்கம்கிருஷ்ணராஜ் & மனோசிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Paasamulla Sooriyane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே…
எங்க பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே…

ஆண் : அந்த வானத்துக்கும் பூமிக்கும்…
வெற்றி கொடி பிடிக்கும் ஐயா வணக்கமுங்க…
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து…
நெத்தியில ஒத்து வச்சா எல்லாம் ஜெயிக்குமுங்க…

ஆண் : ஹேய்… பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே…

ஆண் : ஹேய் புட்றா புட்றா புட்றா மயிலக்காளை…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : ஹேய் புட்றா புட்றா புட்றா மச்சக்காளை…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : ஏரு பூட்டி சோறு போடும் விவசாயி…
யாருக்குமே சளைச்சவன் இல்ல மகமாயி…
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா…

ஆண் : நெத்தி வேர்வை நெலத்தில சிந்தும் தொழிலாளி…
நிமிந்து நின்னா குடிசையும் கோபுரம் மகமாயி…
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு…

ஆண் : எங்க சனம் சேத்துல கால வச்சா…
ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்…

குழு : எங்க சனம் சேத்துல கால வச்சா…
ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்…
ஆண் : ஹான்…

குழு : ஆங் டிங்கு டிங்கு டிங்குடா…
இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா…

ஆண் : அட அள்ளி வச்ச நெல்லுகுள்ள…
எங்க பேரு இருக்கும்…
எட்டுத்திக்கும் பட்டம் கட்டி…
எங்க தேரு நடக்கும்…

ஆண் : பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே… ஏஹே…

—BGM—

ஆண் : வானம் பார்த்த பூமி எல்லாம் ஒரு காலம்… ஓஓஒ…
வானத்தையும் வயலா ஆக்கும் விஞ்ஞானம்…
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா…

ஆண் : நீல வானம் எங்களுக்கு நஞ்சை நெலம்… ஓஓஒ…
மூணு போகம் நெல் வெளையும் நந்தவனம்… ஓஓஒ…
குழு : ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு…

ஆண் : அட நாளை வரும் உலகத்துல…
அந்த நெலவுல சேறடிப்போம்…

குழு : ஆங் பொன்னி நெல நாத்தேடுத்து…
நீல வானமெங்கும் நட்டு வைப்போம்…

குழு : ஆங் டிங்கு டிங்கு டிங்குடா…
இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா…

ஆண் : ஆங் நட்சத்திர மண்டலத்தில்…
பச்சை நெல்லு வெதைக்கணும்…
ராக்கெட்டுல கொண்டு வந்து…
பூமி பசி கொறைக்கனும்…

ஆண் : பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே…
எங்க பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே…

ஆண் : அந்த வானத்துக்கும் பூமிக்கும்…
வெற்றி கொடி பிடிக்கும் ஐயா வணக்கமுங்க…
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து…
நெத்தியில ஒத்து வச்சா எல்லாம் ஜெயிக்குமுங்க…

குழு : அட எல்லாம் ஜெயிக்குமுங்க…
அட எல்லாம் ஜெயிக்குமுங்க…


Notes : Paasamulla Sooriyane Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Manavai Ponmanickam. பாசமுள்ள சூரியனே பாடல் வரிகள்.


Scroll to Top