பாடவா பாடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்பிரவின் மணிலிட்டில் ஜான்

Paadava Paadava Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பாடவா பாடவா அலைகளை பாடவா…
பாடவா பாடவா கரைகளை பாடவா…

பெண் : பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி…
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட…
அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட…

—BGM—

பெண் : மழையின் துளி ஒன்று…
மயில் இறகில் விழுந்தால்…
தோகை மயில் ஆடும்…
காட்சிகளும் கண்டேன்…

பெண் : மழையின் துளி ஒன்று…
பாறைகளில் விழுந்தால்…
மௌனமே மிஞ்சும்…
காட்சிகளும் கண்டேன்…

பெண் : ரெண்டு பொருள் உண்டு…
என்ன பொருள் பாட…
பாலை வனம் எங்கும்…
பால் நிலவு பால் சிந்தி யார் பார்த்திட…

—BGM—

பெண் : சின்ன சின்ன கிண்ணம்…
ஊற்றி வைத்த வண்ணம்…
தூரிகையில் சேர்ந்தால்…
ஓவியங்கள் ஆகும்…

பெண் : ஓவியனின் வண்ணம்…
ஊற்றி வைத்த கிண்ணம்…
பேதை கையில் சேர்ந்தால்…
என்ன நிலையாகும்…

பெண் : ரெண்டு நிலை உண்டு…
எந்த நிலை பாட…
ரசிகனில்லை என்றால்…
தாமரை பூ பூத்து யார் பறித்திட…

—BGM—

பெண் : பாடவா பாடவா…
பாடவா பாடவா பாடவா…

பெண் : பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி…
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட…
அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட…

பெண் : பாடவா பாடவா… ஆஆ…
பாடவா… ஆஆ…

—BGM—


Notes : Paadava Paadava Song Lyrics in Tamil. This Song from Little John (2001). Song Lyrics penned by Vairamuthu. பாடவா பாடவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading