| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஹரி | ஹரிசரண் & சுசித்ரா | யுவன் ஷங்கர் ராஜா | வேல் |
Ottrai Kannale Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி…
உறங்கவில்ல என் மனசு…
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி…
உறங்கவில்ல என் மனசு…
ஆண் : புரியலையே புரியலையே…
நீ யாருன்னு புரியலையே…
தெரியலையே தெரியலையே…
இது காதல்தான்னு தெரியலையே…
ஆண் : புரியாத பெண்ணைப் பார்த்தா…
புதுசாத்தான் காதல் பூக்குதே…
காதல் பூக்குதே…
ஆண் : ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி…
உறங்கவில்ல என் மனசு…
—BGM—
ஆண் : ஓ… சாலையோரப் பூக்கள் எல்லாம்…
உன்னைப் பார்த்து விழுகிறதே…
மாலை நேரப் பட்டாம்பூச்சி…
உன்னைப் பார்க்க துடிக்கிறதே…
ஆண் : நித்தம் நித்தம் உன்னை நினைத்து…
ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே…
உன்னை உன்னை நெருங்கும் போது…
அத்தனை நரம்பும் வெடிக்கிறதே…
ஆண் : பெண்ணே உன்கால் தடங்கள்…
மண்மீது ஓவியமாய்…
கண்ணே உன் கை நகங்கள்…
விண்மீது வெண்பிறையாய்…
ஆண் : தெரியாத பெண்ணை பார்த்தால்…
தெரியாமல் காதல் பூக்குதே…
காதல் பூக்குதே…
ஆண் : ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி…
உறங்கவில்ல என் மனசு…
—BGM—
ஆண் : ஓ… ஓஹோ… கோடைக்கால சாரல் ஒன்று…
என்னை விரட்டி நனைக்கிறதே…
காலை நேரம் காலைத்தொட்ட…
பனித்துளி கூட சுடுகிறதே…
ஆண் : மலரே மலரே உந்தன் வாசம்…
எந்தன் நெஞ்சை உடைக்கிறதே…
அழகே அழகே உந்தன் பார்வை…
என்னைக் கட்டி இழுக்கிறதே…
ஆண் : பெண்ணே உன் வாய்மொழிகள்…
நான் கொண்ட வேதங்களா…
கண்ணே உன் ஞாபகங்கள்…
நான் கொண்ட சாபங்களா…
ஆண் : அறியாத பெண்ணை பார்த்தால்…
அறியாமல் காதல் பூக்குதே…
காதல் பூக்குதே… ஹோ ஹோ…
—BGM—
ஆண் : ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி…
உறங்கவில்ல என் மனசு…
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி…
உறங்கவில்ல என் மனசு…
ஆண் : புரியலையே புரியலையே…
நீ யாருன்னு புரியலையே…
தெரியலையே தெரியலையே…
இது காதல்தான்னு தெரியலையே…
ஆண் : புரியாத பெண்ணைப் பார்த்தா…
புதுசாத்தான் காதல் பூக்குதே…
நானா நானானா நாநா…
Notes : Ottrai Kannale Song Lyrics in Tamil. This Song from Vel (2007). Song Lyrics penned by Hari. ஒற்றைக் கண்ணால பாடல் வரிகள்.


