ஒத்தையில உலகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்திப்பு, அபய் ஜோத்புர்கர் & பார்கவிஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Othayilae Song Lyrics in Tamil


ஆண் : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…

ஆண் : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
ஓஹோ ஹோ ஹோ ஹோ…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…

குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…

குழு : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அரட்டைகள் அடித்தோமே…
குறட்டையில் சிரித்தோமே…
பறட்டையாய் திரிந்தோமே…
இப்போது பாதியில் பிரிந்தோமே…

ஆண் : இரவினில் நிழலாக…
இருவரை இழந்தேனே…
மழையினில் அழுதாலே…
கண்ணீரை யாரு அதை அறிவாரோ…

குழு : அவன் தொலைவினில் தொடர்கதையோ…
இவன் விழிகளில் விடுகதையோ…
இனிமேல் நானே தனியாள்
ஆனேன் நட்பு என்ன நடிப்போ…

BGM

ஆண் : நமக்கென இருந்தோமே…
தினசரி பிறந்தோமே…
திசைகளாய் பிரிந்தோமே…
கல்யாண காட்டினில் தொலைந்தோமே…

ஆண் : பனித்துளி மலரோடு…
பழக்கங்கள் சிலரோடு…
நட்புக்கு முடிவேது…
என்றே நீ சொன்னது மறக்காது…

குழு : நானும் மறக்கிறேன் முடியலயே…
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே…
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்…
நட்பு சேர்க்கும் ஒரு நாள்…

குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…

ஆண் : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…


Notes : Othayilae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Kabilan. ஒத்தையில உலகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading