ஒசக்க ஒசக்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & பிரகதி குருபிரசாத்அனிருத் ரவிசந்தர்வணக்கம் சென்னை

Osaka Osaka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தேனீக் காத்து… தேனீக் காத்து…
தெளிச்சா… ஓ… ஓ…
தெளிச்சா… ஆ… ஆ… ஓ…

—BGM—

ஆண் : தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…

ஆண் : ஏகனா மொகனா பாக்காம…
கவித பாடிக் கெடக்கேனே…
தெக்கா மேக்கா கெழக்காம…
ரெக்க கட்டிப் பறந்தேனே…

ஆண் : ஒசக்க செத்த ஒசக்க…
போயி மெதக்கத்தான் வான் ஏத்தி…விட்டுபுட்டா…
ஒசக்க செத்த ஒசக்க…
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்டா…

—BGM—

ஆண் : ஏ… ஏ… ஏ… ஏசி ரோசா தூசி ரோட்டில்…
வீசி கை வீசி பேசி வந்தா…
தேமீசு தண்ணி பாத்தா…
மீனு வைக ஆத்தோரம் நீந்த வந்தா…

ஆண் : இந்த வயகாட்டு மத்தியில… அஅஅ… ஓஓஓ…
இந்த வயக்காட்டு மத்தியில…
முயல் ஒன்னா துள்ளிகிட்டு…
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு ஏன் போனாளோ…

ஆண் : ஏகனா மொகனா பாக்காம…
கவித பாடிக் கெடக்கேனே…
தெக்கா மேக்கா கெழக்காம…
ரெக்க கட்டிப் பறந்தேனே…

ஆண் : ஒசக்க செத்த ஒசக்க…
போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா…
ஒசக்க செத்த ஒசக்க…
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்டா…

—BGM—

பெண் : ஏ… ஏ… ஏ…கண்ணத் தொறந்தாலும் கலையவில்ல…
கனவா நனவானு புரியவில்ல…
பூவின் மடிமேல தூங்கும் வண்டா…
நானும் மாறிட்டா கவல இல்ல…

பெண் : என் கண் பார்க்கும் தூரம் வர… ஓ… ஓ… ஓ…
என் கண் பார்க்கும் தூரம் வர…
பச்ச புல் விரிச்ச தர…
அது மேல ராணியப் போல நா போனேனே…

ஆண் : தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…

ஆண் : ஏகனா மொகனா பாக்காம…
கவித பாடிக் கெடக்கேனே…
தெக்கா மேக்கா கெழக்காம…
ரெக்க கட்டிப் பறந்தேனே…

ஆண் : ஒசக்க செத்த ஒசக்க…
போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா…
ஒசக்க செத்த ஒசக்க…
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்டா…

—BGM—


Notes : Osaka Osaka Song Lyrics in Tamil. This Song from Vanakkam Chennai (2013). Song Lyrics penned by Madhan Karky. ஒசக்க ஒசக்க பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top