ஒரு கிளியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ராஇளையராஜாபூவிழி வாசலிலே

Oru Kilyin Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

ஆண் : இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…
குழு : வரவு வரவு வரவு வரவு…

ஆண் : விழிகளிலே கனவு மிதந்து வர…
உலகமெலாம் நினைவு பறந்து வர…

ஆண் : தினம் தினம் உறவு உறவு…
குழு : புதிது புதிது…
ஆண் : வரவு வரவு…
குழு : இனிது இனிது…
ஆண் : கனவு கனவு…
குழு : புதிய கனவு… ஆஹா…

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

ஆண் : இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…

BGM

பெண் : முத்து ரத்தினம் உனக்குச் சூட…
முத்திரைக் கவி இசைந்து பாட…
நித்தம் நித்திரை கரைந்து ஓட…
சித்தம் நித்தமும் நினைந்து கூட…

பெண் : சிறு மழலை மொழிகளிலே…
குழு : இனிமை தவழ இதயம் மகிழ…
பெண் : இரு மலரின் விழிகளிலே…
குழு : இரவும் மறைய பகலும் தெரிய…

பெண் : ஆசையால் உனை அள்ள வேண்டும்…
அன்பினால் எனை கொள்ள வேண்டும்…
சேரும் நாள் இதுதான்…
குழு : லல லல லலல் லலல் லலா…

பெண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

பெண் : இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…
குழு : வரவு வரவு வரவு வரவு…

BGM

ஆண் : கட்டளைப் படி கிடைத்த வேதம்…
தொட்டணைப்பதே எனக்கு போதும்…

பெண் : மொட்டு மல்லிகை எடுத்து தூவும்…
முத்து புன்னகை எனக்கு போதும்…

ஆண் : ஒரு இறைவன் வரைந்த கதை…
குழு : புதிய கவிதை இனிய கவிதை…

பெண் : கதை முடிவும் தெரிவதில்லை…
குழு : இளய மனதை இழுத்த கவிதை…

ஆண் : பாசம் என்றொரு ராகம் கேட்கும்…
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்…
பாடும் நாள் இதுதான்…
குழு : லல லல லலல் லலல் லலா…

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

குழு : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…

குழு : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…


Notes : Oru Kilyin Song Lyrics in Tamil. This Song from Poovizhi Vasalile (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு கிளியின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading