கரிசல் தரிசல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி. ஸ்ரீகுமார் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Karisal Tharasal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
உசுர கடந்து மனசும் குதிக்க…
வரவா ஊரும் அடங்க…

பெண் : நாலு தெருவும் தொறந்து கெடக்க…
நாயும் நரியும் முழிச்சு கெடக்க…
முடியுமா என்ன நெருங்க…

ஆண் : ஊரு மலை எல்லாம் கோலி விளையாடி…
வருவேன் கோழி ஒறங்க…
கண்ணுபடுமிண்டு காத்துரூவம் கொண்டு…
வருவேன் நிலவு மயங்க…

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
வரவா ஊரும் அடங்க…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…

ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ன னா ன னா நானா…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே… ஏ மச்சக்கண்ணியே…

—BGM—

பெண் : என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…
என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…

ஆண் : ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு…
எல்லா நெசம் இனி நீயே என் வசம்…
நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம்தான் கூரை பிரிக்கிறதோ… ஓ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

ஆண் : நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

—BGM—

ஆண் : மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…
மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…

ஆண் : பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு…
அது நழுவி வாயில் விழுந்தாச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…

ஆண் : சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…
சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…


Notes : Karisal Tharasal Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. கரிசல் தரிசல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading