நிலா முகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகமது ஷியாம்சாம் விஷால்செபாஸ்டின் ரோஜாரியோஆல்பம் சாங்ஸ்

Nila Mugam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி…
மலராயோ காதலோடு வாசலை தேடி…
யுகம் மனம் மொழி என ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட…
நிலவே நீதான் என் காலமே…

ஆண் : ஹோ ஓஹோ…
என் காலைகள் யாவும் உந்தன் அருகினில்…
ஹோ ஓஹோ…
சோம்பல் முறிக்கின்றதே…

ஆண் : ஹோ ஓஹோ…
என் மாலைகள் யாவும் உந்தன் மடியினில்…
ஹோ ஓஹோ…
மல்லாந்து கிடக்கின்றதே…
ஹோ ஓஹோ…

ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே…
மறுகணம் சிதறுமே என் மனமே…
சிதறிடும் பொழுதிலும் என் உயிரே…
உனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே…

ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே…
மறுகணம் மலரும் என் மனமே…
மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே…
உனை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால்…

—BGM—

ஆண் : கரை சேரும் அலைகளின்…
கடலோர கவிதை…
மனப்பாடம் செய்ய வரிகளை தேடும் பார்வையில்…

ஆண் : விரல் சேரும் நொடிகளில்…
உரையாடும் விழிகளில்…
இதழ் மெளனம் கூட மொழிகளில் சேருமே…

ஆண் : வாடகை காதலில் வாழ்ந்திடும்…
வாழ்க்கை போதுமே…
சொந்தமாய் அன்பே போ…
வா என்றும்… ஓஒ…

ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே…
மறுகணம் சிதறுமே என் மனமே…
சிதறிடும் பொழுதிலும் என் உயிரே…
உனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே…

ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே…
மறுகணம் மலரும் என் மனமே…
மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே…
உனை மட்டும் அணைத்திட…

ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே…
மறுகணம் சிதறுமே என் மனமே…
சிதறிடும் பொழுதிலும் என் உயிரே…
எனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே…

ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே…
மறுகணம் மலரும் என் மனமே…
மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே…
உனை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால்…

ஆண் : காதல் சிறு போர்வை கூடார வீடு…
அன்பே நாளும் நாமும் சொல்லாமல் போர் காணலாம்…
காதல் காகிதங்கள் சொல்லாத முகவரி…
நாமே இனி செல்வோமே நீந்தி…

—BGM—


Notes : Nila Mugam Song Lyrics in Tamil. This Song from Album Song (2023). Song Lyrics penned by Ahamed Shyam. நிலா முகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading