நெஞ்சோரமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாபிரதீப் குமார் & மால்வி சுந்தரேசன்நிவாஸ் கே பிரசன்னாமதில் மேல் காதல்

Nenjorama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற…
மின்சாரமா என்ன தாக்கி போகுற…
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற…
மென்சாரலா என்ன தொட்டு போகுற…

ஆண் : உன்னோடு நான் பேச பேச பேசும் நேரம் ஓடுதே…
நிற்காமல் வேகமா…
உன் கண்களால் இன்னும் நெருங்கி பழக சொல்லி ஏங்குதே…
என் நெஞ்சம் அதிகமாய்…
ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய்…

ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற…
மின்சாரமா என்ன தாக்கி போகுற…
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற…
மென்சாரலா என்ன தொட்டு போகுற…

ஆண் : என்ன தொட்டு போகுற…
என்ன தொட்டு போகுற…

—BGM—

ஆண் : யாரயோ பார்ப்பதால் என்ன பார்க்கையில் வெட்கம் காட்டுறா…
ஜாடைய வீசியே நானும் பேசயில் கோபம் காட்டுறா…
என்னவோ செய்கிறா…
நெஞ்சையே கொய்கிறா…
கூடவே என்னையும் கூட்டி போகுறா…
கூர்மையா பார்த்து தான் கூறு போடுறா…

பெண் : உன் பார்வையால் என்ன கட்டி போடுற…
உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற…
தொடாமலே நீ தீய மூட்டுற…
விடாமலே என்ன நீயும் தேடுற…

பெண் : இப்போதெல்லாம் உன் கூட கூட சேர்ந்து போக…
ஆவலா என் கால்கள் ஏங்குதே…
என்னானதோ உந்தன் பேரை கேட்கும் நேரம்…
துள்ளலா என் கண்கள் திரும்புதே…
கூப்பிடும் தூரத்தில் வாழ தோணுதே…

—BGM—


Notes : Nenjorama Song Lyrics in Tamil. This Song from Madhil Mel Kaadhal (2022). Song Lyrics penned by Mohan Raja. நெஞ்சோரமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading