நீயே சொல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல் & சுனிதா சாரதிஜி. வி. பிரகாஷ் குமார்பொல்லாதவன்

Neeye Sol Song Lyrics in Tamil


BGM

பெண் : நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

பெண் : நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது…
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது…

பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது…
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது…

ஆண் : ஹே… நீயே சொல் என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

BGM

பெண் : போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா…
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா…

ஆண் : மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா…
மரியாதை தெரியாத முத்தம் தா தா…

பெண் : கட்டில் மேல என்ன பண்பாடு…
காதலால் காதல் வேர்கள் தொடு தொடு…

ஆண் : நூறு முறை தொட்டு வைக்கிறேன்…
நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்…
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்…
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்…

பெண் : அச்சத்தை விலக வைக்கிறாய்…
வெட்கத்தை கரைய வைக்கிறாய்…
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்…
இனிமேல் எனை என் செய்குவாய்…

ஆண் : நீயே சொல் என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

ஆண் : நீயே சொல் என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

BGM

ஆண் : உடலைப் போல் அழகான பண்டம் இல்லை…
உதவாத பாகங்கள் இங்கு இல்லை…

பெண் : வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை…
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை…

ஆண் : மூங்கினில் பரவும் புயல் போல…
உனதுடல் மீது உதடும் பரவுது…

பெண் : இப்படியே உயிரும் இனிக்குமா…
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா…
இக்கணமே செத்து விடட்டுமா…
உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா…

ஆண் : இது போலே சமயம் வாய்க்குமா…
என் மடியில் இமயம் சரியுமா…
என் உயிரில் மலைகள் உருகுமா…
பூமி கடந்தெங்கும் போவோமா…

பெண் : ஹே… நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

பெண் : ஹே… நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது…
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது…

பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது…
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது…

பெண் : ரத்தர என் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் என் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…

BGM


Notes : Neeye Sol Song Lyrics in Tamil. This Song from Polladhavan (2007). Song Lyrics penned by Vairamuthu. நீயே சொல் பாடல் வரிகள்.


Scroll to Top