நீங்க முடியுமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்இளையராஜாசைக்கோ

Neenga Mudiyuma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

ஆண் : வானம் பிரிந்த மேகமா…
வாழ்வில் உனக்கு சோகமா…
காதல் போயின் காதல் சாகுமா…
காற்றாகவே நேற்றாகவே…
நீ போனதேன்…

ஆண் : உயிர் போகும் நாள் வரை…
உன்னைத் தேடுவேன்…
உன்னை மீண்டும் பார்த்தப்பின்…
கண் மூடுவேன்…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…

—BGM—

ஆண் : தேவன் ஈன்ற ஜீவனாக…
உன்னைப் பார்க்கிறேன்…
மீண்டும் உன்னை வேண்டுமென்று…
தானம் கேட்கிறேன்…

ஆண் : நீ கண்கள் தேடும் வழியோ…
என் கருணை கொண்ட மழையோ…
நீ மழலைப் பேசும் மொழியோ…
என் மனதை நெய்த இழையோ…

ஆண் : வீசும் தென்றல் என்னை விட்டு…
விலகிப் போகுமோ…
போனத் தென்றல் என்று எந்தன்…
சுவாசம் ஆகுமோ…
இரு விழியிலே ஒரு கனவென…
உன்னைத் தொடருவேன்…..

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

—BGM—

ஆண் : மூன்று காலில் காதல் தேடி…
நடந்து போகிறேன்…
இரண்டு இரவு இருந்த போதும்…
நிலவைக் கேட்க்கிறேன்…

ஆண் : நீ கடந்து போன திசையோ…
நான் கேட்க மறந்த இசையோ…
நீ தெய்வம் தேடும் சிலையோ…
உன்னை மீட்க என்ன விலையோ…

ஆண் : இன்று இல்லை நீ எனக்கு…
உடைந்து போகிறேன்…
மீண்டு வாழ நாளை உண்டு…
மீட்க வருகிறேன்…

ஆண் : ஒரு தனிமையும்…
ஒரு தனிமையும்…
இனி இனையுமே…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

ஆண் : வானம் பிரிந்த மேகமா…
வாழ்வில் உனக்கு சோகமா…
காதல் போயின் காதல் சாகுமா…
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்…

ஆண் : உயிர் போகும் நாள் வரை…
உன்னைத் தேடுவேன்…
உன்னை மீண்டும் பார்த்தப்பின்…
கண் மூடுவேன்…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…


Notes : Neenga Mudiyuma Song Lyrics in Tamil. This Song from Psycho (2020). Song Lyrics penned by Kabilan. நீங்க முடியுமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading