நீ ஒரு காதல் சங்கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாநாயகன்

Nee Oru Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…

—BGM—

பெண் : வானம்பாடி பறவைகள் ரெண்டு…
ஊர்வலம் எங்கோ போகிறது…

ஆண் : காதல் காதல் எனுமொரு கீதம்…
பாடிடும் ஓசை கேட்கிறது…

பெண் : இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது…
எங்களின் ஜீவன் நனைகிறது…

ஆண் : கடலலை யாவும் இசை மகள் மீட்டும்…
அழகிய வீணை சுரஸ்தானம்…
இரவும் பகலும் ரசித்திருப்போம்…

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
பெண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…

—BGM—

ஆண் : பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்…
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்…

பெண் : தேனை ஊற்றும் நிலவினில் கூட…
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்…

ஆண் : கடற்கரைக் காற்றே…
கடற்கரைக் காற்றே வழியை விடு…
தேவதை வந்தாள் என்னோடு…

பெண் : மணலை யாவும் இருவரின் பாதம்…
நடந்ததைக் காற்றே மறைக்காதே…
தினமும் பயணம் தொடரட்டுமே…

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
ஆண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…


Notes : Nee Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. நீ ஒரு காதல் சங்கீதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading