நறு நறு நறுமுகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஆலப் ராஜு & மதுபாலாபிரிட்டோசுண்டாட்டம்

Narumugaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : காற்றின் அலை போலே நெஞ்சம் அலைகிறதே…
காணும் இடமெல்லாம் காதல் படர்கிறதே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

—BGM—

ஆண் : உன் பார்வை ஆயிரம் மொழி சொல்லும்…
அன்பே அன்பே…
உன் இதழ்கள் ஆயிரம் கதை சொல்லும் அன்பே…

ஆண் : உன் சின்ன புன்னகை சிறை செய்யும்…
அன்பே அன்பே…
உன் மௌனம் தீயாய் எனை கொல்லும் அன்பே…

ஆண் : ஓஹோஹோ… இன்பமாய் இம்சைகள் செய்வாய்…
அன்பே என் அன்பே…
இதயத்தில் மழையென பொழிந்தாய் அன்பே… ஹே…

ஆண் : ஓஹோஹோ… காதல் ஒரு வன்முறைதானே…
அன்பே என் அன்பே…
இது கடவுளின் செய்முறை அல்ல அன்பே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

—BGM—

பெண் : உன் கவிதை ஆயிரம் பொய் சொல்லும்…
அன்பே அன்பே…
அது தெரிந்து என் மனம் தலை ஆட்டும் அன்பே…

பெண் : நீ கடந்துப் போகையில் கரைகின்றேன்…
அன்பே அன்பே…
உனைக் காணும் நொடி எல்லாம்…
மலர்கின்றேன் அன்பே…

பெண் : ஓஹோஹோ… கனவினால் இரவினைத் தின்றாய்…
அன்பே என் அன்பே…
உன் காதலால் என்னையும் கொன்றாய் அன்பே… ஓஓ…

பெண் : ஓஹோஹோ… நியூட்டனின் விதிகளை மீறி…
அன்பே என் அன்பே…
நான் மிதக்கிறேன் பூமிக்கு மேலே அன்பே… ஓஹோஹோ…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

—BGM—


Notes : Narumugaye Song Lyrics in Tamil. This Song from Sundaattam (2013). Song Lyrics penned by Snehan. நறு நறு நறுமுகையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading