நான் போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்ஜேம்ஸ் வசந்தன்நாணயம்

Naan Pogiren Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

பெண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

ஆண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

பெண் : கண்ணாடி முன்னே நின்றே…
தனியாக நான் பேச…
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ…
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்…
அறையினுள் நீ வந்தாய்…
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ…

ஆண் : என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்…
பூ மாலை செய்தேன் வாடுதே…
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ…
வாராதோ அந்நாளும் இன்றே… ஹா…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : ஹோ… ம்ம்… நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய்…
தரமாட்டேன் என்றேனே…
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்…
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே…
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்…

பெண் : அன்றாடம் போகும் பாதையாவும்…
இன்று மாற்றங்கள்…
காணாமல் போனேன் பாதியில்…
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்…
என்று இங்கேயே…
கால்நோக கால்நோக நின்றேன்…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…

பெண் : ஹா… ஆ… பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : ஆஆ… தடுமாறிப்போனேன் அன்று…
உன்னைப்பார்த்த நேரம்…

பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…

ஆண் : ஏன் உன்னைப் பார்த்தேன் என்று…
உள்ளம் கேள்விக்கேட்கும்…

பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…
நா நா நா நான் நா…

ஆண் & பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…


Notes : Naan Pogiren Song Lyrics in Tamil. This Song from Naanayam (2010). Song Lyrics penned by
Thamarai. நான் போகிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top