முழுமதி முழுமதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & பெலா ஷெண்டேசதீஷ் சக்ரவர்த்திகனிமொழி

Muzhumadhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

ஆண் : எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…

பெண் : நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது…
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது…
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது…
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

—BGM—

ஆண் : காவியக் காதல் ஆயிரம் கதைகள்…
பூமிக்கு சொன்னதடி…
நினைவுகளோடு வாழ்வது எந்தன்…
காதல் சொல்லுமடி…

பெண் : உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி…
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே…
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன்…
தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

—BGM—

ஆண் : நதியின் காதலை கரையிடம் வந்து…
அலைகள் சொன்னதடி…
மறுபடி மறுபடி அலையிடம் அதை…
கரைகள் கேட்குதடி…

பெண் : நதியினில் நீந்தும் நிலமிதை பார்த்து…
வெளிச்சத்தை அள்ளிச் சிந்தாதோ சிந்தாதோ…
காலையில் நமது காதலை ஏந்தி…
வானத்தில் பறந்து செல்லாதோ செல்லாதோ…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

பெண் : நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது…
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது…
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது…
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது…

ஆண் : முழுமதி முழுமதி நிலவும் சொன்னது…
முழுவதும் முழுவதும் உண்மைதானது…
உன் போல் யாரும் இல்லை என்றது… ஹோ…


Notes : Muzhumadhi Song Lyrics in Tamil. This Song from Kanimozhi (2010). Song Lyrics penned by Na Muthukumar. முழுமதி முழுமதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading