முகையாழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஆனந்த் அரவிந்தாக்ஷன் & ராதிகாராதன்பூமராங்

Mughaiyazhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகையாழி பெண்ணோடு…
அழகாடி போகின்றேன்…
அவளோடு நிழலாய் செல்கின்றேன்…

ஆண் : கடிகாரம் சொல்லாத…
நொடி நேரம் உண்டாக்கி…
அதில் ஏறி காதல் சொல்கின்றேன்…

பெண் : உன்னை பார்த்தால் அணில் ஆகிறேன்
விளையாட மணல் ஆகிறேன்…

ஆண் : முகையே… பெண் : இதமே அறியா…
ஒரு பாதி வாலிபம் கடந்தேன்…
இதழின் மழையில்…
அந்த பாவம் யாவையும் களைந்தேன்…

ஆண் : முகையாழி பெண்ணோடு…
அழகாடி போகின்றேன்…
அவளோடு நிழலாய் செல்கின்றேன்…

BGM

பெண் : யாரோ உரையாடும் போதும்…
நீ என்றே பார்க்கிறேன்…
வீட்டில் உன்னை பொம்மையாக்கி…
என் கைகள் கோர்க்கிறேன்…

பெண் : நாளும் உன் மூச்சிழுத்து…
நான் வாழ பார்க்கிறேன்…
உன்னை கொண்டாடும் ஒரு சொல் ஆகிறேன்…

ஆண் : விழி மூடி விழும் போதிலும்…
விலகாதே உந்தன் ஞாபகம்…
விழையே… யே யே…

குழு : சன னன னன… சன னன னன…
சன னன னன… சன னன னன…
சன னன னன… சன னன னன…

BGM

ஆண் : ஓடும் உன் கால் தடங்கள்…
ஒவ்வொன்றாய் ஏறினேன்…
ஏனோ ஒவ்வொன்றின் மீதும்…
ஒரு நிமிடம் வாழ்கிறேன்…

ஆண் : நீயாய் என் பேர் உதிர்த்தால்…
கொண்டாடி தீர்க்கிறேன்…
நீராய் உன் தோள் குதிக்க மன்றாடினேன்…

பெண் : விழி மூடி விழும் போதிலும்…
விலகாதே உந்தன் ஞாபகம்…
விழையே… யே யே…


Notes : Mughaiyazhi Song Lyrics in Tamil. This Song from Boomerang (2019). Song Lyrics penned by Vivek. முகையாழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading