மூப்பில்லா தமிழே தாயே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
தாமரைஏ.ஆர்.ரகுமான், சைந்தவி, கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமினா ரபிக், கேப்ரியல்லா செல்லஸ், பூவையார், ரக்ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் & நகுல் அபயங்கர்ஏ.ஆர்.ரகுமான்மாஜ்ஜா

Moopilla Thamizhe Thaaye Song Lyrics in Tamil


ஆண் : புயல் தாண்டியே விடியல்…
புதுவானில் விடியல்…
பூபாளமே… தமிழே வா…
தரணியாள தமிழே வா…

ஆண் : விழுந்தோம் முன்னம் நாம்…
எழுந்தோம் எப்போதும்…
பிரிந்தோம் முன்னம் நாம்…
இணைந்தோம் எப்போதும்…

BGM

குழு (பெண்கள்) : திசை எட்டும் தமிழே எட்டும்…
தித்தித்தும் முரசும் கொட்டும்…
மதிநுட்பம் வானை முட்டும்…
மழை முத்தாய் கவிதை சொட்டும்…

குழு (பெண்கள்) : திசை எட்டும் தமிழே எட்டும்…
தித்தித்தும் முரசும் கொட்டும்…
மதிநுட்பம் வானை முட்டும்…
மழை முத்தாய் கவிதை சொட்டும்…

குழு (பெண்கள்) : அகம் என்றால் அன்பாய் கொஞ்சும்…
புறம் என்றல் போராய் பொங்கும்…
தடையின்றி காற்றில் எங்கும்…
தமிழ் என்று சங்கே முழங்கும்…
தடையின்றி காற்றில் எங்கும்…
தமிழ் என்று சங்கே முழங்கும்…

குழு (பெண்கள்) : உறங்காத பிள்ளைக்கெல்லாம்…
தாலாட்டாய் தமிழே கரையும்…
பசியென்று யாரும் வந்தால்…
பாலாகி அமுதம் பொழியும்…

குழு (பெண்கள்) : கொடைவள்ளல் எழுவர் வந்தார்…
கொடை என்றால் உயிரும் தந்தார்…
படை கொண்டு பகைவர் வந்தார்…
பல பாடம் கற்றுச் சென்றார்…

குழு (பெண்கள்) : மூவேந்தர் சபையில் நின்று…
முத்தமிழின் புலவர் என்றார்…
பாவேந்தர் என்றே கண்டார்…
பாராளும் மன்னர் வந்தார்…

குழு (பெண்கள்) : அன்னைக்கும் அன்னை நீயே…
அடிவானில் உதயம் நீயே…
முன்னைக்கும் முன்னை நீயே…
மூப்பில்லா தமிழே தாயே…

குழு (பெண்கள்) : அன்னைக்கும் அன்னை நீயே…
அடிவானில் உதயம் நீயே…
முன்னைக்கும் முன்னை நீயே…
மூப்பில்லா தமிழே தாயே…

குழு (பெண்கள்) : மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…

BGM

பெண் : உதிர்ந்தோம் முன்னம் நாம்…
மலர்ந்தோம் எப்போதும்…
கிடந்தோம் முன்னம் நாம்…
கிளைத்தோம் எப்போதும்…

பெண் : தணிந்தோம் முன்னம் நாம்…
ஏரிந்தோம் எப்போதும்…
தொலைந்தோம் முன்னம் நாம்…
பிணைந்தோம் எப்போதும்…
விழுந்தோம் முன்னம் நாம்…
எழுந்தோம் எப்போதும்…

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே…
அடிவானில் உதயம் நீயே…
முன்னைக்கும் முன்னை நீயே…
மூப்பில்லா தமிழே தாயே…

ஆண் : மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…

ஆண் : தமிழென்றால் மூவகை என்றே…
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று…
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்…
மனம் கொள்ளை கொள்ளும் என்று…

ஆண் : காலங்கள் போகும்போது…
மொழி சேர்ந்து முன்னால் போனால்…
அழிவின்றி தொடரும் என்றும்…
அமுதாகி பொழியும் எங்கும்…

ஆண் : விஞ்ஞானத் தமிழாய் ஒன்று…
வணிகத்தின் தமிழாய் ஒன்று…
இணையத்தில் ஊடல் கொண்டு…
நிறையும் தமிழ் உலகப் பந்து…

ஆண் : மொழியேற்று முன்னே வந்தோம்…
தட்டச்சில் தனியே நின்றோம்…
கணினிக்கும் பொருந்தி கொண்டோம்…
கலைக்கேற்ப மாறிக் கொண்டோம்…

ஆண் : தொழில்நுட்ப கவனம் கொண்டோம்…
மொழி வாங்கி மாறிச் செல்வோம்…
பின்வாங்கும் பேச்சே இல்லை…
முன்னோக்கி சென்றே வெல்வோம்…

பெண் : புதுநுட்பம் என்றே எதுவும்…
கால் வைக்கும் முன்னே தமிழும்…
ஆயத்தம் கொள்ளும் அழகாய்…
ஆடைகள் அணியும் எளிதாய்…

ஆண் : எங்கேயும் சோடை போகா…
என் அருமை தமிழே வா வா…
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வும்…
வளம் பொங்க வா வா வா வா…

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே…
அடிவானில் உதயம் நீயே…
முன்னைக்கும் முன்னை நீயே…
மூப்பில்லா தமிழே தாயே…

பெண் : பழங்காலப் பெருமை பேசி…
படிதாண்டா வண்ணம் பூசி…
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே…
நீ சீறி வா வா வெளியே…

பெண் : வாய் சொல்லில் வீரர் எல்லாம்…
வடிகட்டப்படுவார் வீட்டில்…
சொல்லுக்குள் சிறந்தது என்றால்…
செயல் என்றே சொல் சொல் சொல் சொல்…

ஆண் : சென்றிடுவோம் எட்டுத்திசைக்கும்…
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்…
இரு கைகள் தமிழுக்கமைப்போம்…
ஊர் கூடித் தேரை இழுப்போம்…

ஆண் : மொழியில்லை என்றால் இங்கே…
இடமில்லை என்றே அறிவாய்…
விழித்துக்கொள் தமிழா முன்னே…
இணைத்துக்கொள் தமிழால் உன்னை…

ஆண் : தமிழ் எந்தன் உயிரே என்று…
தினம்தோறும் சொல்வோம் இன்று…
மொழியின்றி யாரைக் கொன்று…
உயர்வோமா உலகில் இன்று…

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே…
அடிவானில் உதயம் நீயே…
முன்னைக்கும் முன்னை நீயே…
மூப்பில்லா தமிழே தாயே…

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே…
அடிவானில் உதயம் நீயே…
முன்னைக்கும் முன்னை நீயே…
மூப்பில்லா தமிழே தாயே…

ஆண் : மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே…

BGM

ஆண் : புயல் தாண்டியே விடியல்…
புதுவானில் விடியல்…
பூபாளமே வா… தமிழே வா…
தமிழே வா…
தரணியாள தமிழே வா…
தரணியாள தமிழே வா…
தமிழே வா…
தரணியாள தமிழே வா…

ஆண் & பெண் : தரணியாள தமிழே வா…

BGM


Notes : Moopilla Thamizhe Thaaye Song Lyrics in Tamil. This Song from Maajja (2022). Song Lyrics penned by Thamarai. மூப்பில்லா தமிழே தாயே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top