| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| தாமரை | பத்மப்ரியா ராகவன் | சுந்தரமூர்த்தி கே.எஸ் | ஐரா |
Megathoodham Song Lyrics in Tamil
பெண் : ஹ்ம்ம்… மேஹதூதம்… ஹ்ம்ம்… மேஹதூதம்…
ஹ்ம்ம்… பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்…
பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு…
தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு…
பெண் : தொலைவிலே வெளிச்சம்…
தனிமையில் உருகும் அனிச்சம்…
கனவுதான் இதுவும் கலைந்திடும் என…
நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்…
பெண் : மேகதூதம் பாட வேண்டும்…
மேனி மீது சாரல் வேண்டும்…
காளிதாசன் காண வேண்டும்…
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்…
பெண் : ஹ்ம்ம்… மேஹதூதம்… ஹ்ம்ம்… மேஹதூதம்…
ஹ்ம்ம்… பாடவேண்டும்… ஹ்ம்ம்…
—BGM—
பெண் : நானும் நீயும் காலம் எழுதி…
காற்றில் வீசிய நாடகம்…
அந்த காற்றே மீண்டும் இணைத்து…
அரங்கம் ஏற்றும் காவியம்…
பெண் : தேவ முல்லை பூக்கும் கொள்ளை…
கொண்டதே என் வீட்டின் எல்லை…
என்னை நீ மறவாதிரு…
புயல் காற்றிலும் பிரியாதிரு…
—BGM—
பெண் : மேகதூதம் பாட வேண்டும்…
மேனி மீது சாரல் வேண்டும்…
காளிதாசன் காண வேண்டும்…
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்…
—BGM—
பெண் : தும்பை போலே தூய அழகை…
உன்னிடம்தான் காண்கிறேன்…
என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்…
நாளை எண்ணி ஏங்கினேன்…
பெண் : இந்த வார்த்தை கேட்க்கும் போது…
ஈரம் ஊறும் கண்ணின் மீது…
பாவையின் இந்த ஈரம்தான்…
கருமேகமாய் உருமாருதே…
பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு…
தாகம் தீர்க்குமா கோடையின் நிலவு…
பெண் : தொலைவிலே வெளிச்சம்…
தனிமையில் உருகும் அனிச்சம்…
கனவுதான் இதுவும் கலைந்திடும் என…
நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்…
—BGM—
Notes : Megathoodham Song Lyrics in Tamil. This Song from Airaa (2019). Song Lyrics penned by Thamarai. மேஹதூதம் பாடல் வரிகள்.
