மழையும் நீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்மரகதமணிஅழகன்

Mazhayum Neeye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : இது என்ன மண்ணில் கூட…
நிலவும் வருமா…
சரசம் பயிலும் விழியில் வருமே…

ஆண் : இது என்ன தென்றல் கூட…
அனலாய்ச் சுடுமா…
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே…

ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே…
அதுதானா காதல் கலை…
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே…
அதுதானா மோன நிலை…

ஆண் : அடடா இதுதான் சொர்க்கமா…
இது காமதேவனின் யாகசாலையா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்…
பருவம் பருவம்…
கடல் நீர் அலைபோல் இதயம் அலையும்…

ஆண் : கருநீலக் கண்கள் ரெண்டும்…
பவழம் பவழம்…
எரியும் விரகம் அதிலே தெரியும்…

ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம்…
அதன் எல்லை யாரறிவார்…
ஏதேதோ சுகம் போதாதோ…
இந்த ஏக்கம் யாரறிவார்…

ஆண் : முதலாய் முடிவாய்…
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…


Notes : Mazhayum Neeye Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. மழையும் நீயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading