மழை நனைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுதா ரகுநாதன்விஷால் சந்திரசேகர்காளிதாஸ்

Mazhai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மழை நனைய வைத்தது ஒரு நாள்…
அதில் மயங்கினேன்…
அலை கரையை தீண்டிய திருநாள்…
மனம் கிரங்கினேன்…

பெண் : உன்னை நான் பார்த்த முதல் நாள்…
வீழ்ந்தேனே எதனால்…
உன் கண் என்னும் சிறகினால்…
அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு…

பெண் : அன்றோடு ஆசை கோபம்…
அனைத்திலும் நீதான்…
ஆவேசம் வந்தால் கூட…
அடங்கும் தீதான்…

பெண் : அன்பே நீ யாரோடா…
அலாதி தேரோடா…

பெண் : மழைநனைய வைத்தது ஒரு நாள்…
அதில் மயங்கினேன்…
அலைகரையை தீண்டிய திருநாள்…
மனம் கிரங்கினேன்…

—BGM—

பெண் : எழில் முகம் காணாமல்…
என்ன வென்றும் கேளாமல்…
எதிரியாய் ஆனதென்ன…

பெண் : முறுவல்கள் தாராமல்…
முத்தமிட வாராமல்…
ஏங்க வைத்து போனதென்ன…

பெண் : வழிகள் எனது விழிகள் எனது…
வரவு உனதல்லவா…
மனது உனது மறதி உனது…
மரணம் எனதல்லவா…

பெண் : மேகம் நீங்க வானம் தாங்க…
நிலா உலா வராதோ…

பெண் : மழைநனைய வைத்தது ஒரு நாள்…
அதில் மயங்கினேன்…
அலைகரையை தீண்டிய திருநாள்…
மனம் கிரங்கினேன்…

—BGM—


Notes : Mazhai Song Lyrics in Tamil. This Song from Kaalidas (2018). Song Lyrics penned by Thamarai. மழை நனைய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading