மயிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு & ஜெயஸ்ரீகுமார் கண்ணத்சாம் சி.எஸ்சலூன்

Mayir Song Lyrics in Tamil


பெண் : பப்பி பப்பி ஷேமுடா…
இங்க எல்லா மயிரும் சேமுடா…

ஆண் : மயிரே ஏ மயிரே…

—BGM—

ஆண் : பப்பி பப்பி ஷேமுடா…
இங்க எல்லா மயிரும் சேமுடா…
பப்பி பப்பி ஷேமுடா…
இங்க எல்லா மயிரும் சேமுடா…

ஆண் : மயிரே ஏ மயிரே…

ஆண் : வகுடொன்னு சைடா…
வகுடொன்னு நேரா…
கண்ணாடி சீப்ப கொண்டு தலைவாறு…
இங்க வணங்காத மயிரு மட்டும் படியாது…
குழு : படியாது…

ஆண் : செரச்சுட்டா கிருதா…
சரக்குனு வருதா…
குணத்துக்கு தாண்டா இங்க மரியதா…
வீணா பொறப்புக்கு பெரும சொல்லி திரியாத…

பெண் : உள்ள ஒரு சவர பொட்டி…
மெல்ல அது சமமா கொத்தி…
சொல்லும் ஒரு புதிய புத்தி…
வெட்டி வெட்டி…

ஆண் : நீயா ஒரு கதையும் கட்டி…
வீணா பல தலைகள வெட்டி…
ஆறா தெனம் வடிவு ரத்தம்…
குடிடா நீ மார் தட்டி…

ஆண் : பப்பி பப்பி ஷேமுடா…
இங்க எல்லா மயிரும் சேமுடா…
பப்பி பப்பி ஷேமுடா…
இங்க எல்லா மயிரும் சேமுடா…

ஆண் : மயிரே ஏ மயிரே…

—BGM—

ஆண் : உலக உருண்ட ஸ்பீடா உருளுது இங்க…
அதுக்கு தலைவாரி பூவச்சு பாக்க ஆளுதான் இல்ல…
மனித உருண்ட தீவா அலையுது இங்க…
அதுக்கு ஒன்னாக உறவாடத்தானே மனசுந்தான் இல்ல…

ஆண் : நானா இல்ல நீயா அட யார்டா இங்க…
நெதம் நெதம் நெலைப்பது…
நேரா அட சைடா அது யாவும்…
இப்ப தரையில கெடக்குது…

ஆண் : மீசா எடு காச இனி பேச…
அட நமகென்ன இருக்குது…
வாழ்க்க ஒரு மேச அதில் ஆசை
மலையாட்டம் குவிஞ்சு…

ஆண் : கெடக்குது கெடக்குது…
பறக்குது பறக்குது…
மயிரெல்லாம் பறக்குது…
மனசிங்க துடிக்குது…

—BGM—

பெண் : தல மேல கொம்பு…
பொழப்புக்கு சொம்பு…
வந்தேறி உளறி வச்ச வரலாறு…
இங்க அதனாலதாண்டா தம்பி தகராறு…

ஆண் & பெண் : அவனுந்தான் மயிரு…
இவனுந்தான் மயிரு…
எல்லாமே கொட்டி போகும் ஒருநாளு…
தானே மாயிருன்னு மீசைக்குந்தான் தெரியாது…

ஆண் & பெண் : பப்பி பப்பி ஷேமுடா…
இங்க எல்லா மயிரும் சேமுடா…
பப்பி பப்பி ஷேமுடா…
இங்க எல்லா மயிரும் சேமுடா…

ஆண் : மயிரே ஏ மயிரே…

ஆண் : மயிரே மயிரே மயிரே…
மயிரே மயிரே மயிரே…
மயிரே மயிரே மயிரே…
மயிரே மயிரே மயிரே…

ஆண் : மயிரே முடி முடி…

—BGM—


Notes : Mayir Song Lyrics in Tamil. This Song from Saloon (2024). Song Lyrics penned by Arivu. மயிர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading